தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? : வெளியாகும் தகவல்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? : வெளியாகும் தகவல்!

சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி வரும் பிப்ரவரி மாதம் மத்தியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகிறது.

இந்த ஆண்டு தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கான வாக்குப் பட்டியல் தயாரிப்பு, வாக்குச் சாவடிகள் அமைத்தல், வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்ய தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்தால் , அண்மையில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையக் குழு தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தியது. அப்போது, முன்கூட்டியே தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? : வெளியாகும் தகவல்!

வழக்கமாக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். இந்த முறை, பள்ளிகளை திறக்க முடியவில்லை என்றாலும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன. அதனால், பொதுத் தேர்வுக்கு இடையூறு இல்லாத வண்ணம் ஏப்ரல் மாதத்திற்குள்ளேயே தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

மேலும், பிப்ரவரி மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தேர்தலின் போது மத்திய படை பாதுகாப்பு குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.