நீங்க பா.ஜ.க.வை எதிர்க்கிறீர்கள் என்றால் மம்தாவை ஆதரியுங்க… காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு வலை விரிக்கும் டி.எம்.சி.

நீங்க பா.ஜ.க.வை எதிர்க்கிறீர்கள் என்றால் மம்தாவை ஆதரியுங்க… காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு வலை விரிக்கும் டி.எம்.சி.

மேற்கு வங்கத்தில், உண்மையில் பா.ஜ.க.வை எதிர்க்கிறீர்கள் என்றால் மம்தா பானர்ஜியை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேதான் நேரடி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. எதிர்வரும் தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதில் திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.

நீங்க பா.ஜ.க.வை எதிர்க்கிறீர்கள் என்றால் மம்தாவை ஆதரியுங்க… காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு வலை விரிக்கும் டி.எம்.சி.
பா.ஜ.க.

அதன் வெளிப்பாடாக, காங்கிரசையும், இடதுசாரிகளையும் (கம்யூனிஸ்ட் கட்சிகள்) தங்கள் பக்கம் இழுக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சி செய்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சவுகதா ராய் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இடதுசாரியும், காங்கிரசும் உண்மையில் பா.ஜ.க.வுக்கு எதிரானவை என்றால், காவி (பா.ஜ.க.) கட்சியின் மதவாத மற்றும் பிளவுப்படுத்தும் அரசியலுக்கு எதிரான போராட்டத்தில் மம்தா பானர்ஜியின் பின்னால் இருக்க வேண்டும்.

நீங்க பா.ஜ.க.வை எதிர்க்கிறீர்கள் என்றால் மம்தாவை ஆதரியுங்க… காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு வலை விரிக்கும் டி.எம்.சி.
சவுகதா ராய்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வுக்கு எதிரான மதச்சார்பற்ற அரசியலின் உண்மையான முகம். இவ்வாறு அவர் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரசின் இந்த கருத்து மேற்கு வங்க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கணக்கு போடுவதாக தெரிகிறது.