அவங்க ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ன சொன்னாலும் பரவாயில்லை.. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை கிண்டலடித்த மம்தா கட்சி

அவங்க ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ன சொன்னாலும் பரவாயில்லை.. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை கிண்டலடித்த மம்தா கட்சி

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை அதனால் அவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல் அடித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில், அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீதம இடஒதுக்கீடு, பெண்களுக்கு இலவச கல்வி உள்பட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அவங்க ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ன சொன்னாலும் பரவாயில்லை.. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை கிண்டலடித்த மம்தா கட்சி
அமித் ஷா

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல் அடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சவுகதா ராய் கூறியதாவது: இந்த மாநிலத்தை சேர்ந்த தலைவர் இல்லாமல் மத்திய பிரதேச தலைவர் முன்னிலையில், மேற்கு வங்கத்துக்கான தேர்தல் அறிக்கையை ஒரு குஜராத்தி (அமித் ஷா) வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வங்க மொழியில் பேசக்கூடிய ஒரு திறமையான மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பா.ஜ.க.வில் இல்லையா? அமித் ஷா இந்தியில் மட்டுமே பேசினார்.

அவங்க ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ன சொன்னாலும் பரவாயில்லை.. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை கிண்டலடித்த மம்தா கட்சி
பா.ஜ.க.

இதனால் வங்காள மக்கள் அவமதிக்கப்படுகிறார். அந்த அறிக்கையில் புதிதாக இல்லை. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை வெற்று. அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை, எனவே அவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு இலவச கல்வி கொடுக்கிறார்களா? இது ஒன்றுமில்லை ஆனால் தவறான வாக்குறுதிகள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.