பசுவின் சிறுநீர் குடித்தால் நோய் குணமாகும் என கூறும் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்?.. திரிணாமுல் காங்கிரஸ்

பசுவின் சிறுநீர் குடித்தால் நோய் குணமாகும் என கூறும் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்?.. திரிணாமுல் காங்கிரஸ்

மாநிலங்களவையில், பசுவின் சிறுநீர் குடிப்பதால் நோய் அல்லது கோவிட்-19 குணமாகும் என்று கூறும் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்? என மத்திய அரசை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஹோமியோபதி மத்திய கவுன்சில்(திருத்த) மசோதா 2020 தொடர்பாக விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சாந்தனு சென் ஹோமியோபதி மையங்களின் பயங்கரமான நிலை குறித்து பேசுகையில், பசுவின் சிறுநீர் குடிப்பதால் நோய் அல்லது கோவிட்-19 குணமாகும் என்று கூறும் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

பசுவின் சிறுநீர் குடித்தால் நோய் குணமாகும் என கூறும் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்?.. திரிணாமுல் காங்கிரஸ்
சாந்தனு சென்

அவர்கள் மறைமுகமாக தனியார் மருத்துவ கல்லூரிகளையும், மோசடிகளையும் ஊக்குவிக்கின்றனர் என தெரிவித்தார். சாந்தனுவின் பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து பதில் தெரிவித்தனர். சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கோபால் யாதவ் கூறுகையில், அலோபதியில் சிகிச்சை இல்லாத நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் உள்ளது என தெரிவித்தார்.

பசுவின் சிறுநீர் குடித்தால் நோய் குணமாகும் என கூறும் அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்?.. திரிணாமுல் காங்கிரஸ்
சுதன்ஷு திரிவேதி

பிஜூ ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பிரசன்னா ஆச்சார்யா கூறுகையில், ஹோமியோபதி ஒரு பழைய இந்திய மருத்துவமுறை மற்றும் அது ஏழைகளுக்கு அணுகக்கூடியது. எனவே நாம் அதை வலுவாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். பா.ஜ.க.வின் சுதன்ஷு திரிவேதி கூறுகையில், ஹோமியோபதி மருந்துகளின் செயல் திறனுக்கு விஞ்ஞான ஆதாரங்கள் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஹோமியோபதி என்பது நோயை மட்டுமல்ல நோயாளியையும் மையமாக கொண்ட ஒரு மருந்து ஆகும். இந்த மருத்துவத்தின் இந்த நீரோடை ஆராயப்படவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம் என தெரிவித்தார்.