மேற்கு வங்கத்தில் பாரத் பந்தை ஆதரிக்க மாட்டோம்… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் பாரத் பந்தை ஆதரிக்க மாட்டோம்… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்

விவசாயிகள் இன்று மேற்கொள்ளும் நாடு தழுவிய முழு அடைப்பில் (பாரத் பந்த்) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் பங்கேற்கின்றன.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயிகள் இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். ஆனால் விவசாயிகளின் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இதற்கிடையே வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி டிசம்பர் 8ம் தேதி (இன்று) பாரத் பந்த் மேற்கொள்ள போவதாக கடந்த சில தினங்களுக்கு விவசாய அமைப்புகள் அறிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் பாரத் பந்தை ஆதரிக்க மாட்டோம்… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ்

விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து, காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், டி.ஆர்.எஸ். மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கும் திரிணாமுல் காங்கிரஸ் விவசாயிகளின் பாரத் பந்தை ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்து இருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பாரத் பந்தை ஆதரிக்க மாட்டோம்… விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த திரிணாமுல் காங்கிரஸ்
சவுகதா ராய்

திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய் இது தொடர்பாக கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் போராடும் விவசாயிகளுடன் நிற்கிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் பாரத் பந்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இது (பாரத் பந்த்) எங்கள் கொள்கைளுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.