கொரோனாவுக்கு மேற்கு வங்கத்திலும் ஒரு எம்.எல்.ஏ உயிரிழப்பு! – அதிர்ச்சியில் மம்தா

 

கொரோனாவுக்கு மேற்கு வங்கத்திலும் ஒரு எம்.எல்.ஏ உயிரிழப்பு! – அதிர்ச்சியில் மம்தா

மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசு கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமோனாஷ் கோஷ் இன்று கொரோனவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

கொரோனாவுக்கு மேற்கு வங்கத்திலும் ஒரு எம்.எல்.ஏ உயிரிழப்பு! – அதிர்ச்சியில் மம்தாமேற்கு வங்கத்தின் பாரகான் மாவட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வந்தவர் தாமோனாஷ் கோஷ். இவருக்கு கடந்த மாதம் கொரோனா அறிகுறி தென்படவே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு சிறுநீரக, இதயக் கோளாறும் ஏற்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இந்த கடின நேரத்தில் அவரை இழந்து வாடும் அவரது மனைவி, மகள்களுக்கும், மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

http://


இந்தியாவில் முதன் முறையாக கொரோனாவுக்கு ஒரு எம்.எல்.ஏ இறந்தது தமிழகத்தில்தான். தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.