மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கொடிய விஷமுள்ள பாம்பும் ஒன்று…. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கொடிய விஷமுள்ள பாம்பும் ஒன்று…. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி. மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில், எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரயில்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கல்யாண் பானர்ஜி கலந்து கொண்டார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கொடிய விஷமுள்ள பாம்பும் ஒன்று…. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு

அந்த போராட்டத்தில் கல்யாண் பானர்ஜி பேசுகையில், கலா நாகினி (கொடிய விஷமுள்ள பாம்பு) கடித்தால் மக்கள் இறக்கும் அதே விதத்தில் நிர்மலா சீதாராமனால் மக்கள் இறக்கின்றனர். அவர் பொருளாதாரத்தை அழித்து விட்டார், அவர் வெட்கப்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மிகவும் மோசமான மத்திய நிதியமைச்சர் என தெரிவித்ததாக தகவல் வெளியானது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் கொடிய விஷமுள்ள பாம்பும் ஒன்று…. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு

கல்யாண் பானர்ஜியின் கருத்துக்கு பா.ஜ.க. உடனடியாக பதிலடி கொடுத்தது. மேற்கு வங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் இது குறித்து கூறுகையில், முதல்வர் தனது கட்சி தலைவர்கள் மீதான பிடியை இழந்து விட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டம் முதல் கீழே வரை ஊழல் பரவி கிடக்கிறது. அவர்கள் உட்கட்சி சண்டையால் குழப்பமடைந்துள்ளனர். அவர்களில் பலர் ஆளும் கட்சியில் நிலவும் சூழ்நிலையிலிருந்து கவனத்தை திருப்ப புத்தியில்லாத கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இது போன்ற கருத்துக்களுக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என தெரிவித்தார்.