ரம்ஜான் பண்டிகையன்று தேர்தல்.. தேர்தல் ஆணையத்தை சாடிய திரிணாமுல் காங்கிரஸ்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க.

ரம்ஜான் பண்டிகையன்று தேர்தல்.. தேர்தல் ஆணையத்தை சாடிய திரிணாமுல் காங்கிரஸ்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் சம்சர்கஞ்ச் சட்டபேரவை தொகுதிக்கு ரம்ஜான் பண்டிகை அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தை திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தனர். இதற்க பா.ஜ.க. பதிலடி கொடுத்தது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சம்சர்கஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடந்த வியாழக்கிழமையன்று அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரெசவுல் ஹக் கொரோனாவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தற்போது மே 14ம் தேதியன்று அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையன்று தேர்தல்.. தேர்தல் ஆணையத்தை சாடிய திரிணாமுல் காங்கிரஸ்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க.
ரெசவுல் ஹக்

மே 14ம் தேதியன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் தேர்தலை அதிலிருந்து 3 நாட்கள் கழித்து தேர்தல் நடத்தினால் அனைவரும் ஓட்டு போட வசதியாக இருக்கும் என்று தேர்தல் ஆணையத்திடம் மேற்குவங்க இமாம்கள் சங்கம் வலியுறுத்தியது. அதேசமயம் தேர்தல் ஆணையம் ரம்ஜான் அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்ததை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

ரம்ஜான் பண்டிகையன்று தேர்தல்.. தேர்தல் ஆணையத்தை சாடிய திரிணாமுல் காங்கிரஸ்.. பதிலடி கொடுத்த பா.ஜ.க.
திரிணாமுல் காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எதிரான சார்புடன் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அந்த கட்சிகள் குற்றம் சாட்டின. இதற்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. சித்திரை மற்றும் பிஹூ தினங்களிலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.