அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால் திமுகவினர் தானாக மது ஆலைகளை மூடப்போகிறார்கள்- டிகேஎஸ் இளங்கோவன்

 

அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால் திமுகவினர் தானாக மது ஆலைகளை மூடப்போகிறார்கள்- டிகேஎஸ் இளங்கோவன்

அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளரான டிகேஎஸ் இளங்கோவன், “எதிர்க்கட்சிகளின் செயல்களை பாராட்ட வேண்டாம். இப்படி குற்றம் சாட்டலாமா?. சிக்கலான சூழ்நிலையில் அரசு செய்ய வேண்டிய பணிகளை எதிர்க்கட்சி மேற்கொள்கிறது. தி.மு.க. செயல் திட்டங்களை வரவேற்க வேண்டும். நோயின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, ஏப்ரல் வரை நடவடிக்கை இல்லை. இந்த அளவிற்காவது தமிழக அரசு செயல்படுகிறதே என்று எங்களுக்கு மகிழ்ச்சி தான். தி.மு.க. செயல் திட்டங்களை வரவேற்க வேண்டும். அரசு சரியாக செய்து இருந்தால் மக்கள் எங்களை ஏன் அணுகுகிறார்கள்? தி.மு.க. கொடுத்த மனுக்களை வைத்து ஒரு சில ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று கூறியது தவறு. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிராகரித்தது. நீங்கள் மதுக்கடைகளை மூடிவிட்டால் எங்கள் கட்சியினர் மது ஆலைகளை மூடி விடுவார்கள். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்பதே தி.மு.க. தலைவரின் நோக்கம். எங்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்திருப்பதை வரவேற்கிறோம்.

அரசு டாஸ்மாக் கடைகளை மூடினால் திமுகவினர் தானாக மது ஆலைகளை மூடப்போகிறார்கள்- டிகேஎஸ் இளங்கோவன்

அமைச்சர் காமராஜ் திமுக தோழர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை குறை சொல்லி பேசியுள்ளார். ஊரடங்கு முதல் முதலில் அறிவித்த போது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி ஒதுகுங்கள் என்று ஸ்டாலின் கூறினார். ஒன்றிணைவோம் என்ற திட்டத்தின் மூலமாக 16 லட்சம் பேருக்கு உதவிஉள்ளோம். இதை தவிர்த்து பலருக்கு திமுகவின் பல இடங்களில் உதவி செய்துள்ளனர். தலைமை செயலாளரிடம் ஒரு லட்சம் மனுக்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெருமையெல்லாம் எங்களுக்கு வந்துவிட கூடாது என்ற நோக்கத்தில் அமைச்சர் காமராஜ் பேசுகிறார். அரசு மக்களின் பசியை போக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. ஏப்ரல் வரை அரசு பரிசோதனையை நடத்தவில்லை. அவதிப்படும் மக்களுக்கு நாங்கள் உதவி செய்வதாக கருதுகிறோம். ஊரடங்கு தீவிர ஊரடங்கு என்று கூறி கோயம்பேடு சந்தைக் அதிக மக்கள் வரும் சூழலை ஏற்படுத்தியது அரசு. அரசியல் செய்யவேண்டும் என்று இல்லாமல் பட்டினி சாவு அதிகரிக்க கூடாது என்பதற்காக நாங்கள் மகளுக்கு உதவிகள் செய்தோம். அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று நாங்கள் கூறவில்லை முழுமையாக செய்யவில்லை என்றுதான் கூறுகிறோம். தொடக்கம் முதலே அரசியல் செய்வதையே அதிமுக நோக்கமாக உள்ளது. திமுகவை குறை கூற வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் பேசுவது ஏற்கமுடியாது” எனக்கூறினார்.