திருவள்ளூர்: கால்நடைகளை மேய்க்க வேறு இடம் இல்லை; மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க எதிர்ப்பு

திருவள்ளூர்: கால்நடைகளை மேய்க்க வேறு இடம் இல்லை; மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க எதிர்ப்பு

அருங்குளம் ஊராட்சியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தமிழ்நாடு குடிமை மாற்று வாரியத்திற்கு ஒப்படைப்பதை எதிர்த்து கிராம பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்: கால்நடைகளை மேய்க்க வேறு இடம் இல்லை; மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் ஊராட்சியில், தாழவேடு வி.என்.கண்டிகை செல்லும் சாலையோரம், 15 ஏக்கர் பரப்பில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அருங்குளம் கிராம பொதுமக்கள் தங்களது கால்நடைகளை மேய்த்து வருகின்றனர். இந்த நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டுவதற்கு வருவாய் துறையினர் ஒப்படைத்ததாக சொல்கிறார்கள்.

இந்நிலையில், அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின், அலுவலகம் முன் ஊராட்சி நிலத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கக்கூடாது என கண்டன கோஷம் எழுப்பி ஆர்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, மனுவாக வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்தனர்.

திருவள்ளூர்: கால்நடைகளை மேய்க்க வேறு இடம் இல்லை; மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்க எதிர்ப்பு

இதுகுறித்து நம்மிடம் பேசிய அருங்குளம் கிராம மக்கள், ‘’எங்க கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். அனைவரும் விவசாயிகள் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறோம். மேற்கண்ட மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் தான் எங்களின் கால்நடைகள் பல ஆண்டுகளாக மேய்ந்து வருகிறது. இந்த இடம் இல்லை என்றால் கால்நடைகளை மேய்க்க முடியாது. எனவே அந்த நிலத்தை குடிசை மாற்று வாரியத்திற்கு வழங்கக் கூடாது’’என்று கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தனர்.