திருவள்ளூர்- கரும்பு நிலுவையை உடனே வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை மனு!

திருவள்ளூர்- கரும்பு நிலுவையை உடனே வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை மனு!

திருவள்ளூர்

கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

திருவள்ளூர்- கரும்பு நிலுவையை உடனே வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை மனு!

திருவள்ளூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக, அதிக அளவில் கரும்பு பயிடிடப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் 5 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது . இந்த கரும்புகளை திருவாலாங்காட்டில் அமைந்துள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அளித்து வருகின்றனர்.

திருவள்ளூர்- கரும்பு நிலுவையை உடனே வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை மனு!

இந்த நிலையில், ஆலை நிர்வாகம் நிலுவை வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில்,
ஆலையை புனரமைத்து மேம்படுத்த வேண்டும் என்றும் , நிலுவைத் தொகை ரூ. 12 கோடியே 50 லட்சத்தௌ உடனடியாக வழங்கிடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்- கரும்பு நிலுவையை உடனே வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை மனு!

கரும்பு வெட்டும் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்றும். ஆட்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆலையின் பிழிதிறன் குறைந்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளதாகவும், உடனடியாக ஆலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

திருவள்ளூர்- கரும்பு நிலுவையை உடனே வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை மனு!

முன்னதாக விவசாயிகள் கரும்பை கையில் ஏந்திக்கொண்டு முழக்கம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.