வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கட்டிடத்தை பார்வையிட்ட ஆட்சியர்

வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கட்டிடத்தை பார்வையிட்ட ஆட்சியர்

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான கட்டிடத்தின் கட்டுமான பணிகளை ஆட்சியர் பொன்னையா இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் நிறைவுறும் தருவாயில் உள்ளது.

வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கட்டிடத்தை பார்வையிட்ட ஆட்சியர்

இந்நிலையில், இன்று கட்டுமான பணிகளை ஆய்வுசெய்த ஆட்சியர், அங்கு விவிபேட் இயந்திரங்களை வைக்கும் அறைகளுக்கு பாதுகாப்புடன் எடுத்துச்செல்வதற்கு லிப்ட் வசதியுடன் கூடிய தரைதளம் மற்றும் முதல் தளங்களையும் பார்வையிட்டார்.

வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கட்டிடத்தை பார்வையிட்ட ஆட்சியர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பொன்னையா, இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிவடையும் என்று தெரிவித்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான 19 ஆயிரத்து 254 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் ஆகியவை இங்கு வைத்து, தகுந்த பாதுகாப்புடன் பராமரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.