திருத்தணியில் இருளர் இன மக்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்…

 

திருத்தணியில் இருளர் இன மக்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்…

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் இருளர் காலனி பகுதியில் கருணை உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் இன்று பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல சின்னத்திரை நடிகை காயத்திரி, திருத்தணி வட்டாட்சியர் அமுதா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, அறக்கட்டளை சார்பில் 100-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் வெல்லம், பச்சரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

திருத்தணியில் இருளர் இன மக்கள் பொங்கல் விழா கொண்டாட்டம்…

தொடர்ந்து, கிராம பெண்களுடன் இணைந்தது நடிகை காயத்திரி பொங்கல் வைத்தும், சிறுமிகளுடன் நடமாடியும் பொங்கல் விழாவை கொண்டாடினார். மேலும், நடன போட்டிகளில் வென்ற சிறுமிகளுக்கு பரிசு பொருட்களையும் அவர் வழங்கினார். இதுகுறித்து பேசிய இருளர் இன பெண்கள், தங்கள் பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், விழாவில் சின்னத்திரை நடிகை காயத்திரி கலந்துகொண்டது இரட்டிப்பு சந்தோஷத்தை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.