மாட்டிறைச்சியை விற்க எதிர்ப்பு தெரிவித்த வட்டாட்சியர் இடமாற்றம்!

 

மாட்டிறைச்சியை விற்க எதிர்ப்பு தெரிவித்த வட்டாட்சியர் இடமாற்றம்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி துளுக்கமுதுர் அருகே உள்ள கானாங்குளம் பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகளை நடத்தி வரும் வேலுசாமி என்பவரை அவிநாசி வட்டாட்சியர் தமிழ்செல்வன், இனி மாட்டு இறைச்சி விற்க கூடாது என கூறி எச்சரித்து உள்ளார்.இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் விமர்சனத்திற்குள்ளான நிலையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

மாட்டிறைச்சியை விற்க எதிர்ப்பு தெரிவித்த வட்டாட்சியர் இடமாற்றம்!

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கானாங்குளத்தில் மாட்டிறைச்சி விற்கக் கூடாது என எச்சரித்து அவிநாசி வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மாட்டு இறைச்சி கடை உரிமையாளரை எச்சரித்த தமிழ்செல்வன் ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். மாட்டு இறைச்சி விற்க வட்டாட்சியர் தமிழ்செல்வன் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ வெளியாகி வைரலானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சியை விற்க எதிர்ப்பு தெரிவித்த வட்டாட்சியர் இடமாற்றம்!

முன்னதாக இதுகுறித்து விளக்கமளித்த அவிநாசி வட்டாட்சியர் தமிழ்செல்வன், சாலை ஓரங்களில் மாட்டு இறைச்சி கடைகள் சுகாதாரமின்றி நடந்து வருவதாக நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. அத்துடன் சாலை ஓரத்திலேயே மாடுகளை வெட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது, இதன் பெயரிலேயே அங்கு ஆய்வு நடத்தி எச்சரிக்கை விடுத்ததாக விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது