திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு, மாவட்ட காவல்துறை சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிப்பு!

திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு, மாவட்ட காவல்துறை சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிப்பு!

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

இதனையொட்டி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், மாவட்ட ஆட்சியர் வினீத், காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு, மாவட்ட காவல்துறை சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் அளிப்பு!

அப்போது, மாவட்ட காவல் துறை சார்பாக நிமிடத்திற்கு 5 லிட்டர் ஆக்சிஜனை செறிவூட்டும் திறனுடைய 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கும் விதமாக அமைச்சர் சாமிநாதனிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், விரைவில் திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் என்றும், அதற்கு பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.