திருப்பத்தூர்: பைக்கில் சென்ற பெண்ணிடம் 9 சவரன் நகை அபேஸ் – ஹெல்மெட் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

திருப்பத்தூர்: பைக்கில் சென்ற பெண்ணிடம் 9 சவரன் நகை  அபேஸ் – ஹெல்மெட் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சி தேங்காய் தோப்பு வட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரின் மனைவி அமுதா (40). இவர் நேற்று முன்தினம் இரவு தனது தந்தையான கணேசன் மற்றும் தாயாருடன் திருப்பத்தூர் சென்றார். இரவு சுமார் 11 மணியளவில் கட்டேரி அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் அவரது தந்தை -தாயார் ஒரு இருசக்கர வாகனத்திலும், அமுதா ஒரு மொபட்டிலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது பல்சர் வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் அமுதாவின் கழுத்திலிருந்த 5 பவுன் தாலிச்சரடையும், 4 சவரன் கழுத்து செயினையும் பறித்து சென்றனர். அப்போது அமுதா கத்தி கூச்சல் இட்டபோது இவருக்கு முன்பு சென்று கொண்டிருந்த இவரது பெற்றோர்கள் ஓடிவந்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி வந்து பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம வாலிபர்கள் 9 சவரன் நகையை பறித்துக்கொண்டு மாயமாகினர்.

திருப்பத்தூர்: பைக்கில் சென்ற பெண்ணிடம் 9 சவரன் நகை  அபேஸ் – ஹெல்மெட் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

பின்னர் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்கள் செயினை பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை எங்கு தேடியும் காணாததால் விரக்தி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று அமுதா புகார் அளித்தார்.

புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் இரவு நேரத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்து 9 சவரன் நகையை பறித்துச் சென்ற ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோன்று கடந்த 12ஆம் தேதி ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள எம்.எம்.எம் ரெட்டி தெரு பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் பாலசுப்பிரமணி என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனது சகோதரியை பார்க்க சென்றபோது அவரது வீட்டில் இருந்த 30 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருப்பத்தூர்: பைக்கில் சென்ற பெண்ணிடம் 9 சவரன் நகை  அபேஸ் – ஹெல்மெட் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

இதனையடுத்து ஜோலார்பேட்டை காவல் நிலையம் சார்பில் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவற்றைக் கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை , நாட்றம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டள்ள மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடித்து விரைவில் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்: பைக்கில் சென்ற பெண்ணிடம் 9 சவரன் நகை  அபேஸ் – ஹெல்மெட் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு