மருதமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

 

மருதமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

கோவை

கந்தசஷ்டி விழாவின் நிறைவையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முருக பெருமானின் ஏழாம் படை வீடான கோவை
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 15ஆம் தேதி கந்த சஷ்டி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கி, நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, கோயிலில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, சிவாச்சாரியார்களை கொண்டு வேதங்கள் ஓதப்பட்டது. பின்னர், கன்னிகா தானம் நிகழ்ச்சியும், வள்ளி, தெய்வானைக்கு பச்சைப்பட்டு உடுத்தும் உற்சவமும் நடைபெற்றது. இறுதியாக காலை 8 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியசாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

மருதமலை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காலை 10 மணிக்கு பிறகு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நடைபெற்றதால், களை இழந்து காணப்பட்டது.