புதிய முதல்வர் தேர்விலும் டிவிஸ்ட் வைத்த பா.ஜ.க… உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார் தீரத் சிங் ராவத்

புதிய முதல்வர் தேர்விலும் டிவிஸ்ட் வைத்த பா.ஜ.க… உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார் தீரத் சிங் ராவத்

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றார். இந்த பதவிக்கு வேறொரு அமைச்சரின் பெயர் பலமாக அடிப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் தீரத் சிங் ராவத்தை முதல்வராக்கி உள்ளது பா.ஜ.க.

உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்படும் பாணி குறித்து கட்சி தலைமைக்கு புகார் கொடுத்தனர். இதன் விளைவாக, கட்சி தலைமையின் உத்தரவு அடிப்படையில் நேற்று முன்தினம் திரிவேந்திர சிங் ராவத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய முதல்வர் தேர்விலும் டிவிஸ்ட் வைத்த பா.ஜ.க… உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார் தீரத் சிங் ராவத்
திரிவேந்திர சிங் ராவத்

இதனையடுத்து அடுத்த முதல்வர் யார் என்று பேச்சு எழுந்தது. அந்த பதவிக்கு, உயர்கல்வி துறை அமைச்சர் தன் சிங் ராவத், மாநிலங்களவை எம்.பி. அனில் பலூனி, சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகாராஜ், ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுரேஷ் பட், மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மக்களவை எம்.பி. அஜய் பட் மற்றும் மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யரி ஆகியோரில் ஒருவர் முதல்வராக என எதிர்பார்க்கப்பட்டது.

புதிய முதல்வர் தேர்விலும் டிவிஸ்ட் வைத்த பா.ஜ.க… உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார் தீரத் சிங் ராவத்
பா.ஜ.க.

பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை அவ்வளவு எளிதில் யாராலும் அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது என்று சொல்வது உண்டு. உத்தரகாண்ட் முதல்வர் தேர்தவிலும் பா.ஜ.க. எதிர்பார்க்காத ஒரு நபரை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது. நேற்று காலை நடந்த பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தீரத சிங் ராவத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து தீரத் சிங் ராவத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று மாலை 4 மணி அளவில் முதல்வராக பொறுப்பேற்றார்.