தொப்பையை குறைக்க வேண்டுமா?.. சில டிப்ஸ் இதோ!

 

தொப்பையை குறைக்க வேண்டுமா?.. சில டிப்ஸ் இதோ!

நாட்டில் பலருக்கு இருக்கும் பிரச்னை இந்த தொப்பை தான். ஒரு சிலர் உடல் எடை சரியாக இருந்தாலும் கூட, தொப்பை மட்டும் பெரிதாக இருக்கும். இது பலரை வெறுப்பில் ஆழ்த்தும். அப்படி தொப்பை அதிகமாக இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்…

தொப்பையை குறைக்க வேண்டுமா?.. சில டிப்ஸ் இதோ!

ஆண்களைக் காட்டிலும் பெண்களின் வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறுபட்டது. மாத விடாய், கர்ப்பகாலம், உடல் எடை கூடுதல் உள்ளிட்ட பல மாற்றங்களை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக கர்ப்பகாலத்தின் போது கூடும் உடல் எடை, குழந்தை பிறந்தவுடன் குறைந்தாலும் தொப்பை மட்டும் அப்படியே இருக்கும். அதே போல, சில பெண்களுக்கு வயிற்றின் மேல் பக்கத்தில் மட்டும் அதிகப்படியான கொழுப்பு நிறைந்திருக்கும். இதற்கு தீர்வு காணுவதற்கு முன்னர், அதற்கான காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

தொப்பையை குறைக்க வேண்டுமா?.. சில டிப்ஸ் இதோ!

தொங்கும் தொப்பை:

உடல் உறுப்புகளில் இருக்கும் கொழுப்பு விரிவடையும் போது தொப்பை ஏற்படுகிறது. குறிப்பாக மகப்பேறு காலத்தில் இது நடக்கும். அதிக கொழுப்பு சேருவதால் அடிவயிறு மற்றும் குடல் பகுதியில் சதை வளர்ந்து விடுகிறது. எல்லாருக்கும் இது ஒரே மாதிரி இருக்காது. உடல்நிலைக்கு ஏற்றாற்போல மாறுபடும். இதை கவனிக்காமல் அப்படியே விடுவது கருப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

குறைக்க முடியுமா?

தொப்பை வராமல் இருக்க கட்டுப்பாடாக உணவு உண்ணுதல் முறையாக உடற்பயிற்சி செய்தாலும் இன்றியமையாதது. தொங்கும் தொப்பையை தனியாக குறைப்பது சாத்தியமல்ல. ஒட்டு மொத்த உடல் எடையை குறைக்கும் போது இந்த தொப்பை குறைய வாய்ப்பு இருக்கிறது. சிட் அப்ஸ் செய்வதன் மூலமாக தொப்பையை குறைக்க முடியுமென சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது தசையை மட்டுமே வலுப்படுத்தும். தொப்பையை குறைக்காது.

தொப்பையை குறைக்க வேண்டுமா?.. சில டிப்ஸ் இதோ!

குறைக்கும் வழிகள்:

தொப்பையை மட்டும் குறைப்பது எளிதான காரியமல்ல என்பதை பார்த்தோம். அதனால், ஒட்டு மொத்த உடல் எடையை குறைப்பதே சிறந்தது. தொடர் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகள் இன்றியமையாதது. சிலர் விலை உயர்ந்த அறுவை சிகிச்சை முறையை கூட மேற்கொள்கிறார்கள். இருப்பினும், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் மூலமாகவே குறைப்பது சிறந்தது.