அம்மாக்களே !சாப்பிட மறுக்கும் குழந்தை சாப்பிட சில குறுக்கு வழிகள்

 

அம்மாக்களே !சாப்பிட மறுக்கும் குழந்தை சாப்பிட சில குறுக்கு வழிகள்

வீட்டில் இருக்கும் அம்மாக்களுக்கு பெரிய சவாலான விஷயம் என்னவென்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான் புதுப்புது ரெசிபிக்களை விதம் விதமாக செய்து கொடுத்தாலும் குழந்தைகளிடம் இருந்து வரும் பதில் என்னவோ வேண்டாம் என்பது தான். குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்க பல உளவியல் காரணங்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய சில வழிகள்.

அம்மாக்களே !சாப்பிட மறுக்கும் குழந்தை சாப்பிட சில குறுக்கு வழிகள்

எந்த உணவையும் குழந்தைகளுக்கு தகுந்த முறையில் தகுந்த சுவையில் கொடுத்தால் கட்டாயம் அடம் பிடிக்கும் குழந்தைகளை கூட சமர்த்தாக உண்ண வைக்க முடியும்.

உங்கள் உணவு நேரத்தை மகிழ்ச்சியாகவும் டென்ஷன் இல்லாமலும் வைத்திருங்கள். உங்கள் குழந்தை அடம்பிடிப்பார்கள் என்று முன்பே உணர்ந்திடுங்கள். குடும்பமாக ஒருவேளை உணவாவது உண்ணுங்கள். அவர்கள் மற்றவர்கள் உண்பதை பார்த்தால் உணவில் உள்ள ஆர்வம் அதிகரிக்கும். தொலைக்காட்சியை பார்ப்பதோ அல்லது ஃபோன் பயன்படுத்துவதோ உணவு உண்ணும் நேரத்தில் தவிர்த்திடுங்கள். உண்ணும் உணவின் நற்குணங்களை பகிர்ந்திடுங்கள். காய்கறி, பழங்கள் மற்றும் கீரைகளை அவர்களைக் கவரும் வண்ணம் நறுக்கிக் கொடுங்கள். இதையெல்லாம் செய்து அவர்களுக்கு உணவின் மேல் உள்ள ஆர்வத்தை பெருக்குங்கள்.

கீரை, குடைமிளகாய் மற்றும் ஏராளமான காய்கறிகளை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு காய்கறிகளை வித்தியாசமான வடிவங்களாக அறுத்து அவற்றை பறிமாருங்கள். வெஜ்ஜி பீட்சா சப்பாத்தியாக செய்து கொடுங்கள். சுருட்டிய சப்பாத்தியின் நடுவில் காய்கறிகளை மறைத்து விடுங்கள். உணவு வகைகளுக்கு வித்தியாசமான பெயர்களைச் சூட்டுங்கள். இதெல்லாம் காயின் மேல் உள்ள கவனத்தை மாற்றி ஆர்வத்துடன் உண்ண உதவிச் செய்யும்

குழந்தைகள் தேவையற்ற நொறுக்கு தீனியை அடிக்கடி உண்பதால் வயிறு நிரம்பிய உணர்வை பெறுகின்றனர். இதனால் உணவு சாப்பிட்ட மறுக்கின்றனர். ஆதலால் நொறுக்கு தீனியின் பக்கம் கவனம் செலுத்தாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.

 குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் பசி எடுக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். பசி எடுககம் நேரத்தில் உணவு கொடுத்தால் முழுமையாக சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவை வெறுக்கிறார்கள் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். வயிற்றில் ஏதேனும் தொந்தரவு இருந்தாலும் உணவு உண்ண முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும். எனவே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும

எப்போதும் அவர்களிடம் ஓரே மாதிரியாக அன்பு காட்டுங்கள். உணவு ஊட்டும் போது மட்டும் கொஞ்சி பேசாதீர்க்ள். ஏனென்றால் அந்த கரிசன நேரத்தை நீட்டித்து கொள்ள நீண்ட நேரம் எடுத்து கொள்வார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள். இடையிடையே அந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு விஷயங்களையோ கதைகளையோ குழந்தைகளுக்கு கூறிக்கொண்டே உணவு கொடுங்கள்.