Home லைப்ஸ்டைல் உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத 10 விஷயங்கள் #ParentingTips

உங்கள் குழந்தையின் முன் செய்யக்கூடாத 10 விஷயங்கள் #ParentingTips

குழந்தைகள் புதிய விஷயம் ஒன்றைக் கற்றுக்கொள்கிறார்கள் என்றால், அது நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ… ஏதோ ஒன்றைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள்.

பெரும்பாலும் அவர்கள் பள்ளியில் பாடங்கள், ஹோம் வொர்க், மனப்பாடம்… என ஆயிரம் டென்ஷன்களோடு கழிப்பார்கள். இப்போது கொரோனா அவற்றிற்கு தற்காலிக விடுவிப்பை அளித்துள்ளது.

வெளியில் குழந்தைகளை விளையாட அனுப்பும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. எனவே, பள்ளி செல்லாத மற்ற நேரங்களில் அநேகமாக வீட்டில்தான் இருப்பார்கள்.

’பெறோர்களே குழந்தைகளின் முன் மாதிரி’ ஆயிரம் பேர் ஆயிரம் விதமாகச் சொல்லியிருக்கிறார்கள். அலுப்பூட்டும் என்றாலும் அதுதான் உண்மை. பல குழந்தைகளின் ஹேர் ஸ்டைல் பெற்றோரைப் போலவே இருப்பதை நாம் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பெற்றோரின் பாதிப்பு இயல்பாக குழந்தைகளிடம் ஒட்டிக்கொள்ளவே செய்யும்.

அப்படியெனில், பெற்றோரின் தங்கள் நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வது நல்லது.

child

உங்கள் குழந்தைகள் முன் நீங்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள் என்பதைப் பார்ப்போம்.

1. சண்டை வேண்டாம்: என்னதான் முக்கியப் பிரச்னையாக இருந்தாலும்கூட குழந்தைகளின் முன் சண்டை போடாதீர்கள். அதனால் இரண்டு சிக்கல்களை குழந்தைக்கு நேரிடும். ஒன்று… சண்டைக்கு காரணமான விஷயம் புரியாததாலும் உங்களின் ரியாக்‌ஷன்களாலும் பயப்படுவது. இரண்டு, கோபத்தில் நீங்கள் உதிர்க்கும் கெட்ட வார்த்தைகளைத் தெரிந்துகொள்வது.

2. கடன்களைப் பற்றி பேசாதீர்கள். நம்ம பொண்ணு/பையன் தானே என்று நினைத்து உங்களின் கடன்களையும் அவற்றை கஷ்டப்பட்டு அடைப்பதைப் பற்றிய உரையாட வேண்டாம். ஏனெனில், அதை நன்கு புரிந்துகொண்ட குழந்தை எனில், அதனுடைய அடிப்படையான பொருள்களைக்கூட உங்களிடம் கேட்க கூச்சப்படும். அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

3. உறவினர்களை கேலி செய்யாதீர்கள். உங்கள் மூலமாகத்தான் உறவினர்களின் அருமைகள் குழந்தைகளுக்குத் தெரியவரும். அந்த உறவினர்களின் முன் நல்லபடியாகப் பேசிவிட்டு வீட்டில் திட்டினால் குழந்தைக்கு உறவினர் பற்றி மட்டுமல்ல, பெற்றோரைப் பற்றியும் நல்ல எண்ணம் வராமல் போய்விடும்.

4. நோய் குறித்துபேச வேண்டாம். உங்களுக்கு நெருக்கமாக தெரிந்தவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் பெரிய நோய் எனில், அதைப் பற்றி விரிவாக குழந்தைகள் முன் பேசுவதைத் தவிருங்கள். ஏனெனில், அதன் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தனக்கு இருந்தால், அந்த நோயே வந்துவிட்டதைப் போல குழந்தை பயம் கொள்ளகூடும்.

5. உங்கள் தோல்விகளைப் பேசாதீர்கள். வாழ்க்கை என்பதில் வெற்றியைப் போலவே தோல்விகளும் வரவே செய்யும். அப்போது இடிந்துபோவது இயல்பு. ஆனால், அதை குழந்தைகள் முன் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடலாம்.

6 உடலுறவு தொடர்பான பேச்சு, சைகைகளைத் தவிருங்கள். குழந்தைகள் டிவி பார்க்கிறது… மொபைலில் என்னவோ விளையாடுகிறது என்று நினைத்துக்கொண்டு உடலுறவு தொடர்பான பேச்சு அல்லது சைகளைக் காட்டாதீர்கள். எந்த நொடியும் அக்குழந்தை தன் கவனத்தைத் திருப்பி உங்களைப் பார்க்க நேரிடலாம். அது அக்குழந்தையின் மனநலத்துக்கு நல்லதல்ல.

child-migrane

7. தேவையற்றதை வாங்காதீர்கள் – வீட்டுக்கே வந்து விற்கப்படும் பொருள்களில் இது தேவையில்லை… பின்னாளில் தேவைபடலாம் என நினைத்து ஒரு பொருளை குழந்தை முன் வாங்காதீர்கள். அது உங்கள் குழந்தையின் திட்டமிடல் திறனைப் பாதிக்கலாம்.

8. கடன் கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள். இது ரொம்பவுமே முக்கியமானது. ஒருவரிடமிருந்து நீங்கள் கடன் வாங்கும்பட்சத்தில் ஒரு வித தாழ்வுமனப்பான்மை ஏற்படக்கூடும். கடன் கொடுப்பவரின் குழந்தைகள் உங்கள் குழந்தையின் ஃப்ரெண்ட் எனில் சிக்கல் இன்னும் அதிகம்.

இதே போலவே ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுப்பதைப் பார்க்கும் குழந்தைக்கும் ஏற்படும். அப்பாவிடம் நிறைய காசு இருக்கு என்பதாகவும் பணம் வாங்குபவரின் குழந்தையைப் பற்றி தாழ்வாகவும் எண்ணக்கூடும்.

drunk drive

9.மது, புகை – போதை தரும் உடலுக்கும் மனதுக்கும் கெடுதலான பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு தனியே விளக்கி காரணங்களைச் சொல்ல வேண்டியதில்லை. தீய பழக்கம் ஒன்று இருப்பதை உங்கள் மூலம் அறிமுகமாவதை ஒருபோது அனுமதிக்காதீர்கள்.

10. கொஞ்சம் முன்னெச்சரிக்கை: இதை என் மகன்/மகள் பார்க்காமல் இருந்தால் நல்லா இருக்கும் என நீங்கள் நினைக்கும் எல்லா விஷயங்களையும் திரும்பவும் செய்துவிடாதீர்கள்

இதில் உங்கள் குழந்தை எனும்போது கூடுதல் அக்கறை காட்டுவீர்கள் என்பதால் ‘உங்கள்’ என்பது உள்ளது. பொதுவாக குழந்தைகள் முன் இவற்றைச் செய்வதைத் தவிருங்கள்

Most Popular

“எடுங்கடா வண்டிய ,புடிங்கடா அவளை” -மகனின் காதலியை கடத்திய தாய்.

ஒரு பெண்ணை காதலிக்கும் காதலனின் தாயே, அவரின் காதலியை கடத்திக்கொண்டு போய் மகனுக்கு கட்டி வைக்க முற்ப்பட்டபோது பிடிபட்டார். பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில்...

மீண்டும் ஒலித்த முதல்வர் கோஷங்கள் !

வருங்கால முதல்வர் !? நிரந்தர முதல்வர் !? என்கிற கோஷங்களால் அதிமுகவுக்கு இரண்டு பிரிவுகளாக அணி சேர்க்கை உள்ள நிலையில், செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.ஏற்கெனவே இந்த குழப்பத்தால் நிர்வாகிகளும்,...

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க ஸ்டாலின்; பச்சை நிற மாஸ்க், துண்டு அணிந்து போராட்டம்!

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை தொடக்கியுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்...

அதிமுக தலைமை கழகத்தில் களை கட்டிய பழைய உற்சாகம்!

அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தலைமை கழகத்தில் தொண்டர்களிடம் பழைய உற்சாகத்தை காண முடிகிறது. யார் முதல்வர் வேட்பாளர் என்கிற குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்றாலும், தொண்டர்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!