வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு தரும் 5 சாபங்கள்

 

வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு தரும் 5 சாபங்கள்

’எப்போதும் டிவி பார்த்திட்டே இருக்கான்’ என்று குழந்தைகளைப் பற்றி புகார் அளிக்கும் பெற்றோர்கள் குறைந்துவிட்டனர். அதனால், குழந்தைகள் நல்ல பழக்கத்திற்கு மாறிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. அதை வேறொரு தீய பழக்கத்திற்கு தாவி விட்டார்கள்.

ஆம். வீடியோ கேம் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் கம்ப்யூட்டர் இருந்தால்தான் ஆட முடியும் என்ற நிலைமை இருந்தது. ஆனால், தற்போது ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் போதும்.

என்ன விதமான வீடியோ கேம்ஸ் வேண்டுமானாலும் அதில் இன்ஸ்ட்டால் செய்துகொள்ளலாம். மணிக் கணக்கில் ஆடலாம் என்ற நிலையாகி விட்டது.

வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு தரும் 5 சாபங்கள்

அதனால், பல வீடுகளில் அப்பா, அம்மா வெளியே சென்று வந்தபிறகு, அவர்களின் மொபைல் இருப்பது குழந்தைகளிடம்தான். அதனால், இவ்வளவு நேரம் என்றில்லாமல் எப்போதுமே கேம்ஸ் விளையாடிக்கொண்டே இருக்கின்றனர்.

சாதாரணமாகப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் பொழுதுபோக்கு என்று ஒதுக்கி விடலாம். ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால் வீடியோ கேம்ஸால் ஏகப்பட்ட சிக்கல்கள் வருகின்றன.

சில சிக்கல்கள் உடனே தெரிந்துவிடுகிறது. ஆனால், பல சிக்கல்கள் அவர்கள் வளர வளரத்தான் தெரிய வருகிறது. குழந்தைகளைக் கவரும் விதத்தில் வீடியோ கேம்ஸ் உருவாக்கப்படுகின்றன என்பது நமக்குத் தெரியும்.

ஆனால், தற்போது பல மொபைல்கள் வீடியோ கேம்ஸ் நீண்ட நேரம் ஆடலாம் என்று சொல்லிக்கூட விளம்பரம் செய்கிறார்கள்.

வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு தரும் 5 சாபங்கள்

ஆக, எல்லாமும் சேர்ந்து குழந்தையை நோக்கி வீடியோ கேம்ஸைத் தள்ளுகின்றன. பெற்றோர் உஷாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அப்படியென்ன வீடியோ கேம்ஸ் குழந்தைகளைக் கெடுத்துவிட போகிறது எனக் கேட்பவர்கள், வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு அளிக்கும் 5 சாபங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு தரும் 5 சாபங்கள்

வன்முறை மனநிலை: வீடியோ கேம்ஸில் பெரும்பாண்மை சுடுவது, அடிப்பது, ரேஸில் மற்றவற்றைத் தள்ளி விட்டுச் செல்வது போன்ற டார்க்கெட்டுகள் தான் வைக்கப்படுகின்றன. குறிப்பாக, துப்பாக்கிச் சுடும் கேம்ஸ் குழந்தைகளை ரொம்பவே வசிகரித்துவிடுகின்றன.

அமெரிக்காவின் ஹார்வர்டு யுனிவர்சிட்டி என்ன சொல்கிறது என்றால், ’வன்முறை நிறைய வீடியோ கேம்ஸ்க்கு அடிமையாகும் குழந்தைகள் எதிர்காலத்தின் வன்முறையாளர்களாக மாற வாய்ப்பிருக்கிறது’ என்கிறது.

எனவே குழந்தைகளின் இயல்பான வெகுளியான மனத்தையே மாறிவிடுகின்றன வீடியோ கேம்ஸ்.

வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு தரும் 5 சாபங்கள்

கண்பார்வை: ஒரே இடத்தில் மிகக் கவனமாகப் பார்ப்பது, அதுவும் மொபைல் எனில் கண்களுக்கு மிக அருகில் வைத்து விளையாடுவது குழந்தைகளின் பழக்கமாகி விட்டது.

இதனால், உடனே பாதிக்கப்படுவது கண்கள்தான். ஏற்கெனவே, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து உணவில் சத்தே இல்லாமல் போய்வரும் நிலையில் விரைவில் கண்பார்வை கோளாறுகளை வீடியோ கேம்ஸ் கொண்டு வந்துவிடுகின்றன.

வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு தரும் 5 சாபங்கள்

உடல்நலக்கோளாறு: வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் அநேகருக்கு ஓடி ஆடி ஆடும் விளையாட்டுகள் பிடிப்பதில்லை. அதனால், உடல்நலச் சோர்வோடு எப்போதும் காணப்படுவார்கள்.

மேலும் அதிக உடலசைவு இல்லாததால் செரிமானம் உள்ளிட உடல்நலக் கோளாறுகள் ஏற்படவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு தரும் 5 சாபங்கள்

கவனம் சிதறும் படிப்பு: வீடியோ கேம்ஸ்க்கு அடிமையாகும் குழந்தைகளின் நினைப்பு எப்போதும் அதன் மீதே இருக்கும். அப்பா எப்போது வீட்டுக்கு வருவார்; மொபைலில் எப்போது வீடியோ கேம்ஸ் விளையாடுவது என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள்.

அதனால், இயல்பாகவே படிப்பின் மீதான கவனம் சிதறிவிடும். அதனால், அதிக மதிப்பெண் எடுப்பது குறைந்துவிடும். பாடத்தை புரிந்துகொள்வதிலும் சிக்கல் ஏற்படும்.

வீடியோ கேம்ஸ் உங்கள் குழந்தைக்கு தரும் 5 சாபங்கள்

பெற்றோருடன் விலகல்: எல்லாவற்றையும் விட இது ரொம்பவே முக்கியம். வீடியோ கேம்ஸ்க்கு அடிமையாகும் குழந்தைகள் பெரும்பாலும் தனிமையை விரும்பத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களிடம் பேசுவதுகூட குறைந்துவிடும். மனம் விட்டு பெற்றோர்களிடம்கூட பேச மாட்டார்கள்.

எனவே, பெற்றோருடன் விலகல் ஏற்படும். நல்ல நண்பர்கள் கிடைக்காமல் போய்விட வாய்ப்பிருக்கிறது.

வீடியோ கேம்ஸ்க்கு அடிமையான குழந்தையை மெல்ல வேறு நல்ல பழக்கங்களுக்கு மாற்றுங்கள். முடியவில்லை எனில் உளவியல் நிபுணர்களின் ஆலோசனையைப் பெற தாமதம் செய்யாதீர்கள்.