மீண்டும் நம்மை தீண்டும் கொரானாவிடமிருந்து மீண்டு வர இந்த பழங்களை எடுத்துக்கோங்க

 

மீண்டும் நம்மை தீண்டும் கொரானாவிடமிருந்து மீண்டு வர  இந்த பழங்களை எடுத்துக்கோங்க

2019ஆம் ஆண்டு இறுதியில் உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்று வுகான் நகரில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இது எப்படி பரவியது என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த வைரஸை சீனாவே வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து வெளியேற்றியதாக புகார்களும் எழுந்துள்ளன. இதை சீன அரசு மறுத்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை காரணமாக ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டில் R Factor அதிகமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரானா அதிகரிக்க தொடங்கியுள்ளது

மீண்டும் நம்மை தீண்டும் கொரானாவிடமிருந்து மீண்டு வர  இந்த பழங்களை எடுத்துக்கோங்க

மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிக முக்கியமானது. கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை போல ஆக்சிஜனின் அளவையும் அதிகரிக்க செய்வ வேண்டியது முக்கியம். அதற்கான இயற்கை வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கீழே கொடுக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சேர்த்து வந்தால் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும்.

ஆப்பிள்

ஆப்ரிகாட்

எலுமிச்சை

பேரிக்காய்

உலர் திராட்சை

கிவி

பப்பாளி

தர்பூசணி

சாத்துக்குடி

குடைமிளகாய்

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. எனவே வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதற்கு நேரத்தை ஒதுக்குங்கள். உடற்பயிற்சின்போது வாய்வழியாக மூச்சு விடுவதை தவிர்க்க வேண்டும். வாய்வழியாக சுவாசித்தால் ஆக்சிஜன் அளவு வேகமாக உடலில் இருந்து குறையும்.

போதுமான தண்ணீர் உடலுக்கு கிடைக்காதபோது உடல் இயக்கத்தில் மாறுபாடு ஏற்படும். உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.