விற்பனைக்கு வந்தது டைமக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்!

 

விற்பனைக்கு வந்தது டைமக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்!


டைமக்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த ஐ-கனெக்ட் ஸ்மார்ட் கைக் கடிகாரம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஐ-கனெக்ட் ஸ்மார்ட் கைக் கடிகாரம், மொபைல் செயலியுடன் இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இதய துடிப்பு அளவு, தூங்கும் நேரம் போன்றவற்றை மொபைல் செயலியில் பதிவு செய்யும். இந்த ஸ்மார்ட் கை கடிகாரத்தினை ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், ஐந்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். 40 எம்.எம், மற்றும் 45 எம்.எம். என இரண்டு அளவுகளில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வந்தது டைமக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்!

6 ஆயிரத்து 995 ரூபாயில் இருந்து 7 ஆயிரத்து 295 ரூபாய் வரை இதன் விலை இருக்கும். டைமக்ஸ் நிறுவனத்தின் ஷோரூம் தவிர, இணைய தளம் வழியாகவும் இந்த ஸ்மார்ட் கைக் கடிகாரத்தினை வாங்க முடியும்.
இந்த ஸ்மார்ட் கைக் கடிகாரத்தினை, இரண்டு செயலிகளுடன் இணைத்துக் கொள்ளலாம். தண்ணீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போன், குறுஞ்செய்திகள், காலாண்டர் உள்ளிட்ட வசதிகள் கைக் கடிகாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். கையில் கட்டும் பட்டை, மிருதுவான சிலிகான், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.