டிக் டாக் ஊழியர்களின் நிலை என்ன? விளக்கமளிக்கும் டிக் டாக் தலைவர்

 

டிக் டாக் ஊழியர்களின் நிலை என்ன? விளக்கமளிக்கும் டிக் டாக் தலைவர்

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இருநாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. டிக்டாக் நிறுவன இந்திய தலைவர், இந்திய நிறுவனத்தின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட தயார் என தெரிவித்தார்.

டிக் டாக் ஊழியர்களின் நிலை என்ன? விளக்கமளிக்கும் டிக் டாக் தலைவர்

இதற்கிடையில் மேற்கண்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை எதிர்காலம் மற்றும் வேலை கேள்விக்குறியாகியுள்ளது.டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெவின் மேயர்ஸ் இந்திய ஊழியர்களுடன் வீடியோ வாயிலாக உரையாடினார். அப்போது அவர், “இந்திய சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்க டிக்டாக் செயல்பட்டு வருகிறது. பயனர்களின் தனியுரிமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. அரசின் இடைக்கால தடை அமலில் இருக்கும் வரை டிக்டாக் படைப்பாளிகளின் நலனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். எங்கள் ஊழியர்களே எங்களது மிகப்பெரிய பலம். ஊழியர்களின் நலன் எங்களுக்கு மிகவும் முக்கியம். ஊழியர்களின் நலனையும், வாய்ப்புகளையும் பாதுகாப்பதற்காக எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம் என 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு உறுதியளித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.