அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்? – ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்? – ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

டிக்டாக் இந்தியாவில் தடை செய்வதற்கு முன் அதை கோடிக்கணக்கில் பயன்படுத்தினார். டிக்டாக் போல குறுகிய காலத்தில் புகழ்பெற்ற ஆப் எதுவும் இருக்க முடியாது. அந்தளவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களால் டவுண்லோடு செய்யப்பட்டது.

’டிக்டாக்’ பலரின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ரசிகர்கள், தாங்களே பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடும் வாய்ப்பை அளித்தது டிக்டாக்.

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்? – ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

இந்தியாவுக்கு சீனாவுடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக எழுந்த பிரச்னையில் டிக்டாக் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சீன நிறுவன ஆப்களை தடை செய்தது இந்தியா.

அமெரிக்காவிலும் டிக்டாக் ஆப்க்கு தடை விதிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க ரகசியங்களை சீன நிறுவனத்திற்கு அளிப்பதாகக் குற்றச்சாட்டை அது முன் வைத்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ரஷ்யா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்? – ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

டிக்டாக் ஆப் அமெரிக்கர்களின் ரகசியங்களை விற்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதனால் அமெரிக்காவிடம் டிக்டாக் ஆப் விற்பனை செய்ய வேண்டும் என ட்ரம்ப் விதித்த உத்தரவுக்கு அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனால், அமெரிக்காவில் இயல்பாக டிக்டாக் புழக்கத்திற்கு வரக்கூடும் என அதன் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.