மத்திய அரசின் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு இந்தியாவில் செயல்பட தயார் : டிக் டாக் நிறுவனம்!

மத்திய அரசின் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு இந்தியாவில் செயல்பட தயார் : டிக் டாக் நிறுவனம்!

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இருநாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு இந்தியாவில் செயல்பட தயார் : டிக் டாக் நிறுவனம்!

இதன் எதிரொலியாக டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு இந்தியாவில் செயல்பட தயார் : டிக் டாக் நிறுவனம்!

இதை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சீன நிறுவனத்தின் 59 செயலிகளுக்கு தடை விதித்த நிலையில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இந்த நடவடிக்கையை தற்போது எடுத்துள்ளது.

மத்திய அரசின் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு இந்தியாவில் செயல்பட தயார் : டிக் டாக் நிறுவனம்!

இந்நிலையில் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுத்த தயார் என டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு இந்தியாவில் செயல்பட தயார் என்றும் இந்தியாவின் தகவல்களை சீனா உட்பட எந்த அரசு நிறுவனத்திற்கும் தர மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தடையை தொடர்ந்து சீனாவின் டிக் டாக் செயலி நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது.