‘மீண்டும் புழக்கத்துக்கு வந்த டிக் டாக் செயலி’ எந்த நாட்டில் தெரியுமா?

‘மீண்டும் புழக்கத்துக்கு வந்த டிக் டாக் செயலி’ எந்த நாட்டில் தெரியுமா?

டிக் டாக்க்கிற்கு தடை விதித்திருந்த பாகிஸ்தான், தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற செயலிகளுள் முக்கியமான ஒன்று டிக் டாக். சீன நிறுவனத்துக்கு சொந்தமான இந்த டிக் டாக் செயலிக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்தது. இந்திய எல்லை பகுதியில் அத்துமீறிய சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டிக் டாக் உடன் பல செயலிகள் தடை செய்யப்பட்டது.

‘மீண்டும் புழக்கத்துக்கு வந்த டிக் டாக் செயலி’ எந்த நாட்டில் தெரியுமா?

அதே போல, டிக் டாக் நிறுவனம் சீனாவுக்கு தரவுகளை தெரிவிப்பதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்காவும் டிக் டாக்கிற்கு தடை விதித்தது. சீனாவுடனான மோதல் காரணமாகவே அமெரிக்காவும், இந்தியாவும் டிக் டாக்கிற்கு தடை விதித்த நிலையில், ஒழுக்ககேடு மற்றும் ஆபாசம் ஆகிய காரணங்களால் பாகிஸ்தான் டிக் டாக்கை தடை செய்து உத்தரவிட்டது.

‘மீண்டும் புழக்கத்துக்கு வந்த டிக் டாக் செயலி’ எந்த நாட்டில் தெரியுமா?

இந்தியாவிலும் இதே போன்ற புகார்கள் எழுந்தது. அதாவது, தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள சிலர் ஆபாசமான வீடியோக்களை டிக் டாக்கில் வெளியிட்டனர். அந்த வீடியோக்கள் ஒழுக்ககேடுகளுக்கு வித்திடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த நிலையில், ஆபாசம் மட்டும் ஒழுக்க கேடு வீடியோக்கள் மீண்டும் பரவினால் அந்த கணக்கை உடனடியாக நீக்குவதாக டிக் டாக் நிறுவனம் உறுதி அளித்தன் பேரில், டிக்டாக் செயலிக்கான தடையை நீக்குவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.