தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

 

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, நெல்லை உட்பட 17 மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

முன்னதாக தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி புயலாக மாறியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு நிசர்கா புயல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிசர்கா புயல் மும்பையை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நாளை முதல் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது. ஜூன் 3-ஆம் தேதி நிசர்கா புயல் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.