சிஎஸ்கே அணியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

சிஎஸ்கே அணியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. நாடே கதறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் முக்கியமா என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நாங்கள் தொடரை நடத்தியே தீருவோம் என ஒற்றைக் காலில் நிற்கிறது பிசிசிஐ. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் பலர் பிசிசிஐ விமர்சித்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்திய வீரரான அஸ்வினும் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். அவரது மனைவி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

சிஎஸ்கே அணியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!

தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இருக்கிறார்கள். பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இதற்குள்ளேயே கொரோனா நுழைந்துவிட்டது. கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் இன்று நடைபெறவிருந்த ஆர்சிபி-கொல்கத்தா போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் சிஎஸ்கே அணியிலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி, அணியின் பேருந்து கிளீனர் என மூவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இச்செய்தி வெளியானவுடன் சிஎஸ்கே அணி பயிற்சியை ரத்து செய்தது.