“ஆண்களுக்கு ஓட்டுற வேலை ,பெண்களுக்கு கூட்டுற வேலை” -ஏரோபிளேனில் வேலையென்று ஏமாந்த சோகம்

 

“ஆண்களுக்கு ஓட்டுற வேலை ,பெண்களுக்கு கூட்டுற வேலை” -ஏரோபிளேனில் வேலையென்று ஏமாந்த சோகம்


விமானத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் ஏமாற்றிய மூவரை போலீஸ் கைது செய்தது

“ஆண்களுக்கு ஓட்டுற வேலை ,பெண்களுக்கு கூட்டுற வேலை” -ஏரோபிளேனில் வேலையென்று ஏமாந்த சோகம்


புதுடெல்லியில் தனியார் விமான நிறுவனங்களிலும், இந்திய விமான நிலைய ஆணையத்திலும் படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் வாங்கி கொடுப்பதாக சமூக ஊடகத்தில் சமீபத்தில் ஒரு விளம்பரம் வந்தது .அந்த விளம்பரத்தை ஹிமான்ஷு தாக்கூர் (25), சுபாம் திவாரி (23), அஜய் தாக்கூர் (31)ஆகியோர் கொடுத்திருந்தனர் .அந்த விளம்பரத்தை பார்த்த பல பெண்களும் ஆண்களும் அவர்கள் குறிப்பிட்டிருந்த விலாசத்தில் குவிந்தனர் .பின்னர் அவர்கள் அவர்களிடம் வேலை வேண்டுமென்றால் உடனே லட்சக்கணக்கில் பணம் கட்ட சொன்னார்கள் .அதை நம்பி பலர் பணம் கட்டினர் .
ஆனால் அவர்கள் சொன்னபடி யாருக்கும் எந்த வேலையும் வாங்கிக்கொடுக்கவில்லை .அதனால் ஏமாந்த ஒருவர் மட்டும் துணிச்சலாக டெல்லி போலீசில் புகார் கொடுத்தார் .அவரளித்த புகாரில் தான் 160000 ரூபாய் ஏமாந்துள்ளதாகவும், அதனால் அதை உடனே அந்த நபர்களிடமிருந்து மீட்டு தருமாறு கூறினார் .உடனே போலீசார் அந்த மோசடி நபர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர் .அப்போது நடந்த விசாரணையின் போது, ​​வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் போன்ற அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டன. .பின்னர் அந்த ஹிமான்ஷு தாக்கூர் , சுபாம் திவாரி , அஜய் தாக்கூர் ஆகிய மூவரை கைது செய்தனர் .அவர்களிடமிருந்து நான்கு மொபைல் போன்கள், சிம் கார்டுகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.