கடன் தவணை செலுத்தக்கோரி பெண்ணுக்கு மிரட்டல்… தனியார் வங்கி ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு!

 

கடன் தவணை செலுத்தக்கோரி பெண்ணுக்கு மிரட்டல்… தனியார் வங்கி ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு!

தூத்துக்குடி

கோவில்பட்டியில் வங்கி கடனை செலுத்தக்கோரி மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் வீட்டில் புகுந்து மிரட்டல் விடுத்த தனியார் வங்கி ஊழியர்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பாலன் தெருவை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி சித்ரா(44). மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் இவர், தனியார் வங்கி மற்றும் நுண் நிதி நிறுவனம் மூலம் குழு உறுப்பினர்களுக்கு கடன் வாங்கி கொத்துள்ளார்.

கடன் தவணை செலுத்தக்கோரி பெண்ணுக்கு மிரட்டல்… தனியார் வங்கி ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு!

இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலையின்றி தவித்து வருவதால் குழு உறுப்பினர்கள் கடந்த 2 வாரங்களாக தவணை செலுத்த வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் விமல், கருப்பசாமி மற்றும் நுண் நிதி நிறுவன ஊழியர் வீரக்குமார் உள்ளிட்டோர் நேற்று சித்ராவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, மகளிர் குழுவினரிடம் பணம் வசூலித்து தரும்படி கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சித்ரா இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தனியார் வங்கி ஊழியர்கள் மற்றும் நுண் நிதி நிறுவன ஊழியர்கள் என 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.