கனமழை எதிரொலி – தஞ்சையில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

கனமழை எதிரொலி – தஞ்சையில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. புரெவி புயல் வலுவிழந்த நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்ப நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கனமழை எதிரொலி – தஞ்சையில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

மேலும், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த முன் பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கனமழை காரணமாக கல்லணையில் இருந்து பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தப்பட்ட போதிலும், சூரக்கோட்டை, காட்டூர், ஒரத்தநாடு, மடிகை உள்ளிட்ட பகுதிகளில் நடவுசெய்யப்பட்ட 120 நாள் பயிர்கள், அடியோடு சாய்ந்து, நீரில் மூழ்கின.

கனமழை எதிரொலி – தஞ்சையில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

இதனால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதேபோல, திருவையாறு, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால், அவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக வடிகாலை சரிசெய்து நீரை வடியசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு, தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.