அண்ணா பல்கலை.முறைகேடு: ஆதாரம் இருப்பவர்கள் புகார் அளிக்கலாம்!

 

அண்ணா பல்கலை.முறைகேடு: ஆதாரம் இருப்பவர்கள் புகார் அளிக்கலாம்!

அண்ணா பல்கலைக் கழக முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் என விசாரணை அலுவலர் கலையரசன் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து தான் அனைத்து சர்ச்சைகளும் தொடங்கியது. ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்க அரசு அனுமதி வழங்காத நிலையிலும், அரசுக்கு எதிராக துணை வேந்தர் சூரப்பா சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதை தொடர்ந்து, அரியர் தேர்ச்சி விவகாரத்திலும் மீண்டும் சூரப்பாவுக்கும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அண்ணா பல்கலை.முறைகேடு: ஆதாரம் இருப்பவர்கள் புகார் அளிக்கலாம்!

இவ்வாறாக அரசுக்கு எதிராக செயல்படும் துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் புகார்களும் எழுந்தன. இதனால் இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணைக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், விசாரணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

அண்ணா பல்கலை.முறைகேடு: ஆதாரம் இருப்பவர்கள் புகார் அளிக்கலாம்!

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக ஆதாரம் உள்ளவர்கள் நேரில் புகார் அளிக்கலாம் என விசாரணை அலுவலர் கலையரசன் அறிவித்துள்ளார். அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.