10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி இல்லை? – தெளிவுபடுத்த கோரிக்கை

10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி இல்லை? – தெளிவுபடுத்த கோரிக்கை

10ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்று அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தள்ளது.
கடந்த மார்ச் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல் ஆனதால் 10ம் வகுப்பு பொதுத்

10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி இல்லை? – தெளிவுபடுத்த கோரிக்கை

தேர்வு நடத்த முடியவில்லை. கொரோனா கட்டுக்குள் வராத காரணத்தால் தொடர்ந்து தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது. மேலும், காலாண்டு. அரையாண்டு, வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி இல்லை? – தெளிவுபடுத்த கோரிக்கை
பல பள்ளிகள் பொதுத் தேர்வை மனதில் வைத்து காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை ஒழுங்காக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு என்ன மதிப்பெண் வழங்கப்படும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வருகிற திங்கட்கிழமை (10ம் தேதி) வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும். மாணவர்கள் அளித்த மொபைல் எண்ணுக்கு மதிப்பெண் விவரம் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி இல்லை? – தெளிவுபடுத்த கோரிக்கை
தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. காலாண்டு, அரையாண்டில் ஒரு பாடத்துக்கான தேர்வு எழுதாதவர்களுக்கு கூட தேர்ச்சி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மையா என்பது தெரியவில்லை. இந்த தகவல் பல பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையாக இருந்தால் ஏராளமான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.