நாளை திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

 

நாளை திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கும் அதிமுக தலைமை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக ஜெயகுமார் என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும் தேர்தலில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார்தான் வெற்றி பெற்றார்.

நாளை திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் நாளை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 300 பேருடன் நாளை காலை 10.30 மணிக்கு திமுகவில் இணைய உள்ளார். மேற்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைகிறார்.

நாளை திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்

தோல்விக்கு பின்னர், தோப்பு வெங்கடாசலம் செந்தில்பாலாஜி மூலமாக திமுகவில் சேர முயன்று வந்த நிலையில் நாளை இணையவிருக்கிறார்.முன்னதாக அதிமுகவிலிருந்து தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் இணைந்த நிலையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜிலா திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.