சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலி;தூத்துக்குடி எஸ்.பி மாற்றம்!

 

சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலி;தூத்துக்குடி எஸ்.பி மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.

சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலி;தூத்துக்குடி எஸ்.பி மாற்றம்!

 

அதனை விசாரித்த நீதிபதிகள் உயிரிழந்தவர்களின் உடலில் அதிக காயங்கள் இருப்பதால் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது என கருத்து தெரிவித்தனர். மேலும், இந்த வழக்குத் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்த நிலையில் காவலர்கள் தாக்கியதால் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தற்போது தூத்துக்குடி எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தென்மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் ஓய்வு பெறுவதால் புதிய ஐ.ஜியாக முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி பாலகோபாலன் காத்திருப்பு பட்டியலில் வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.