காட்பாடியில் த்ரில் வெற்றிக்கு இதுவே காரணம் : துரைமுருகன் ஓபன் டாக்!

 

காட்பாடியில் த்ரில் வெற்றிக்கு இதுவே காரணம் : துரைமுருகன் ஓபன் டாக்!

2021 சட்டமன்ற தேர்தலில் 10 வது முறையாக காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். தற்போது திமுகவின் மிக முக்கிய பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் உள்ள இவர் 1971-ல் காட்பாடி , 1977, 80-களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 1984 இல் சொந்த தொகுதியான காட்பாடியில் மண்ணை கவ்விய இவர் 1989 மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1991இல் காட்பாடியில் தோல்வி, மீண்டும் 1996 இல் வெற்றி என வலம்வந்த இவர் , 2001, 2006, 2011, 2016 தொடர்ந்து வெற்றியையே அம்மாவட்ட மக்களிடமிருந்து பரிசாக பெற்றார்.

காட்பாடியில் த்ரில் வெற்றிக்கு இதுவே காரணம் : துரைமுருகன் ஓபன் டாக்!

இதனால் இந்த முறையும் துரைமுருகன் எளிதில் வெற்றிபெற்று விடுவார் என்று நம்பப்பட்டது. காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் , அதிமுக சார்பில் வி. ராமு, அமமுக சார்பில் ஏ.எஸ்.ராஜா, ஐஜேகே வேட்பாளராக எம்.சுதர்சன், நா.த.க வேட்பாளர் ச. திருக்குமரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் துரைமுருகனுக்கும் , அதிமுக வேட்பாளர் வி. ராமுவுக்கும் கடும் போட்டி நிலவியது. ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்து வந்த இவர், இறுதியில் 758 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

காட்பாடியில் த்ரில் வெற்றிக்கு இதுவே காரணம் : துரைமுருகன் ஓபன் டாக்!

இந்நிலையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், “காட்பாடியில் குறைவான வாக்குகளில் வெற்றிபெற்றதற்கு அந்த சூழலே காரணம். இதற்கு முன்னர் கூட காட்பாடியில் இப்படி நிகழ்ந்துள்ளது. தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நல்லாட்சியை தருவார்” என்றார்.