Home லைப்ஸ்டைல் ஆரோக்கியம் தற்சார்பு விதையை வளர்த்தெடுக்க இது சரியான தருணம்

தற்சார்பு விதையை வளர்த்தெடுக்க இது சரியான தருணம்

தற்சார்பு… கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆழமாக ஊன்றப்பட்டிருக்கும் விதை. தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள ஒவ்வொருவரும் உசுப்பி விடப்பட்டிருக்கிறார்கள். காலத்தின் தேவையறிந்து அதன் பயனறிந்து பலர் தற்சார்பு விஷயத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.


நஞ்சில்லா உணவு:
தற்சார்பு அல்லது சுயசார்பு விதையை நம்மாழ்வார் போன்றவர்கள் ஊன்றிச்சென்றாலும் அது தட்டுத்தடுமாறியே வளர்ந்து கொண்டிருக்கிறது. நஞ்சில்லா உணவு கிடைக்கவேண்டும்; அதற்கு இயற்கை விவசாயமே சிறந்த வழி என்பதை வலியுறுத்தும் நிலையில் இந்த தற்சார்பு விதை அதற்கு நல்லதோர் ஆதாரமாக இருக்கும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வீடுகளில் உள்ள காலியிடங்களிலும், மொட்டை மாடிகளிலும் தொட்டிகளில் வளர்க்கப்படும் செடி, கொடிகளுக்கு பெரும்பாலும் செயற்கை உரங்கள் அளிக்கப்படுவதில்லை. காரணம் அதில் லாப நோக்கம் எதுவுமில்லை. தானாக அல்லது ஊன்றப்படும் செடிகளுக்கு வீட்டிலுள்ள காய்கறிக்கழிவுகள் நல்லதோர் இயற்கை உரமாகும்.

பூச்சி, நோய்த்தாக்குதல்:
பூச்சிகள் மற்றும் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும் செடிகளைக் காத்துக்கொள்ள இயற்கை முறையில் என்னென்னவோ வழிகள் இருக்கின்றன. செடிகளின் வேர்ப்பகுதியைச் சூழ்ந்து கேடு விளைவிக்கும் எறும்புகளை அழிக்க வசம்புடன் புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து ஊற்றினாலே போதும். இதேபோல், மாவுப்பூச்சிகளை விரட்ட வேப்ப எண்ணெய் அல்லது வேப்ப இலைக்கரைசல் போதும்.

செலவு அதிகம் இல்லாத இந்த இயற்கை விவசாயத்தில் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். மிகச்சிறப்பான முறையில் அவரவர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். அன்றாடச் சமையலுக்குத் தேவையான கீரைகள், காய்கறிகளை சுத்தமான, சுகாதாரமான சூழலில் விளைவித்து பலன்பெறலாம்.

நோய்களின் தாக்கம் அதிகரித்துவரும் இன்றைய சூழலில் இயற்கை விவசாயம் மீது பலரது பார்வை திரும்பியிருக்கிறது. சத்துகள் இல்லாத, நச்சுக்கள் நிறைந்த உணவை ஏன் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று பலரும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு இந்த தற்சார்பு நிச்சயம் கைகொடுக்கும்.

self-sufficiencyசரியான தருணம்:
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த பலர் தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் வேலையில்லை என்னும்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த தற்சார்பு நல்லதொரு வழியைக் காட்டும்.

தற்சார்பு அடிப்படையில் இயற்கை விவசாயம் செய்வதன்மூலம் நஞ்சில்லா உணவு கிடைக்கும். பெரிய அளவில் இதைச் செய்யும்போது நம்மையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நோய்களின் பிடியிலிருந்து காப்பாற்றிய பெருமை கிடைக்கும். தற்சார்பு என்ற விதை எப்போதோ ஊன்றப்பட்டாலும் அதை வளர்த்தெடுக்க இதுவே சரியான தருணம். யதார்த்தம் உணர்ந்து செயல்படுவோம்.

மாவட்ட செய்திகள்

Most Popular

தேமுதிக, அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த பெருங்கூட்டம்!

தேமுதிக, அதிமுகவில் முக்கிய பொறுப்பிலிருக்கும் நிர்வாகிகள் சிலர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில்,...

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், செஸ் மாஸ்டர் பலி

தூத்துக்குடி தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் செஸ் மாஸ்டர் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி...

ஒருபக்கம் விவசாயிகள் போராட்டம் – மறுபக்கம் அரசின் தேநீர் விருந்து

நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்...

மின்ணொளியில் ஜொலிக்கும் ஜெயலலிதாவின் நினைவிடம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் ரூ.79 கோடி மதிப்பில், ஃபீனிக்ஸ் பறவை அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டது. அந்த நினைவிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில்,...
Do NOT follow this link or you will be banned from the site!