கடைசி வரை த்ரில் – இலங்கை LPL ஃபைனலில் நுழைந்த முதல் அணி இதுதான்!

 

கடைசி வரை த்ரில் – இலங்கை LPL ஃபைனலில் நுழைந்த முதல் அணி இதுதான்!

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் எப்படி ரசிகர்களை மகிழ்வித்ததோ, அதேபோல தற்போது இலங்கையில் நடைபெறும் LPL போட்டிகள் பட்டையைக் கிளப்புகின்றன.

இலங்கையில் LPL போட்டிகள் கடந்த எட்டாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில், கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்லை ஹோர்கஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

கடைசி வரை த்ரில் – இலங்கை LPL ஃபைனலில் நுழைந்த முதல் அணி இதுதான்!

இதில் கண்டி அணி மட்டும் அரையிறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. மற்ற அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. நேற்று இரவு நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியோடு மோதியது காலி கிளாடியேட்டர்ஸ் அணி.

பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தில் இருந்த கொழும்பே வெல்லும் என்பது பலரின் கருத்தாக இருந்தது. அதற்கு உதவும் விதமாக, முதலில் பேட்டிங் ஆடும் வாய்ப்பும் கொழும்பு அணிக்கு கிடைத்தது.

கடைசி வரை த்ரில் – இலங்கை LPL ஃபைனலில் நுழைந்த முதல் அணி இதுதான்!

கொழும்பு அணியில் பெல் ட்ராமோண்ட் 53 பந்துகளில் 70 ரன்களும் உடானா 11 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 150 ரன்களில் சுருண்டது கொழும்பு. அரையிறுதி போட்டிகளுக்கு இது மிகக் குறைவான ஸ்கோரே.

அடுத்து ஆடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் ராஜபக்‌ஷே 17 பந்துகளில் 33 ரன்களும், லக்‌ஷமன் விக்கெட் இழக்காமல் 23 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.

போட்டி இறுதி ஓவரில் பரபரப்பானது. எந்த அணி வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற நிலை இருந்தது. இறுதியில் ஒரு பந்து மீதமிருக்க வெற்றி இலக்கான 151 ரன்களை எடுத்தது காலி கிளாடியேட்டர்ஸ்.

இதன்மூலம் எல்பிஎல் இறுதிப்போட்டிக்கு முதலில் நுழையும் அணிகிறது காலி கிளாடியேட்டர்ஸ்.