லவ் ’பிரேக் அப்’ ஆகாமல் இருக்க உங்களுக்குள் வர வேண்டிய முதல் மாற்றம் இதுதான்!

 

லவ் ’பிரேக் அப்’ ஆகாமல் இருக்க உங்களுக்குள் வர வேண்டிய முதல் மாற்றம் இதுதான்!

காதல் எனும் வார்த்தையே அழகுதான். அதுவும் டீன் ஏஜில் ஒருவர் மீது மற்றொருவருக்கு ஏற்படும் ஈர்ப்பு எல்லாம் கடந்து, சரியான வயதில் உருவாகும் காதல் பேழகானது.

காதல் வயப்பட்டது பெண்ணோ / ஆணோ அவர்களுக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும் எல்லோரும் மாயமானதைப் போல இருவர் மட்டுமே பேசிக்கொள்வார்கள்; சேர்ந்து சுற்றுவார்கள்.

லவ் ’பிரேக் அப்’ ஆகாமல் இருக்க உங்களுக்குள் வர வேண்டிய முதல் மாற்றம் இதுதான்!

ஒருவருக்கு ஏதேனும் சின்ன துயர் என்றாலும் பதறிபோய் விடுவார்கள். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஓடோடி வருவார்கள். அந்தத் துயரைப் போக்க யாரையும் எதிர்க்க தயாராகி விடுவார்கள். அதுதான் காதல்.

பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்வது மணிக்கணக்கில் பேசுவதெல்லாம் வெகு சாதாரணமாகி விடும். காதல் வயப்பட்ட இருவருக்கும் மற்றவரின் ஒரு நாளைய ஷெட்யூல் என்னவென்று தெளிவாகத் தெரியும். அதில் பெரும்பாலான நேரம் இருவரும் பேசிக்கொள்வதாகத்தான் இருக்கும். உலகமே தங்களைப் பார்ப்பதாக நினைத்துக்கொள்வர்.

காதலித்து கெட்டு போ.
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி..

என்று நா.முத்துக்குமார் எழுதிய ஒவ்வொரு வரியும் தனக்கே என்று தோன்றும்.

லவ் ’பிரேக் அப்’ ஆகாமல் இருக்க உங்களுக்குள் வர வேண்டிய முதல் மாற்றம் இதுதான்!

இந்த அன்பின் பின் என்ன இருக்கிறது… இந்த அன்பு எதனால் இறுக்கமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று நாம் பார்த்தால், இவள் / இவன் தனக்கானவன் / தனக்கானவள் எனும் பெருமிதமும் உரிமையும்தான் காரணமாக இருக்கும்.

ஆனால், இந்தப் பெருமிதத்ததின் உரிமையின் சுவரில் மிக கவனமாகப் பயணிக்க வேண்டும். ஏனெனில், இது எப்போது வேண்டுமானாலும் பொசஸிவ்னெஸாக மாறிவிடக்கூடும்.

லவ் ’பிரேக் அப்’ ஆகாமல் இருக்க உங்களுக்குள் வர வேண்டிய முதல் மாற்றம் இதுதான்!

ஏதோ ஒரு நொடியில் பிறக்கும் ஈகோ, ‘ஏன் நான்தான் தினமும் ஃப்ர்ஸ்ட் மெசேஜ் அனுப்பி குட் மார்னிங் சொல்லணுமோ என்று நினைக்க வைத்துவிடும். இதைக்கூட சற்று மனம் விட்டு உரையாடி தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், பொசஸிவ்னெஸ் நிச்சயம் காதல் உறவில் பேரழிவை ஏற்படுத்திவிடும்.

தொழில்நுட்பங்களால் இணைந்திருக்கும் காலம்.

‘இரவு 2 மணி வரை வாட்ஸப்பில் என்னோடு சாட் பண்ணினாய்… ஆனால், மூன்று மணிக்கு லாஸ்ட் சீன் காட்டுதே உனக்கு…. யாரோடு பேசிக்கொண்டிருந்தாய்’

‘அவனை அன்ஃப்ரெண்ட் பண்ணிவிட்டதாய் சொன்ன, இன்னிக்கு உனக்கு லவ் சிம்பள் போட்டிருக்கான். இல்ல.. இல்ல.. சும்மாதான் கேட்டேன்’

இப்படி என்னவெல்லாமோ கேட்க வைத்துவிடும். சந்தேகம் எனும் பெரும் மாய பிசாசைப் பழக்கிவிட அனுமதித்துவிடும் பொசஸிவ்னெஸ்.

அதனால் உங்களின் லவ் பிரேக் அப் ஆகாமல் இருக்க உங்களிடம் ஏற்பட வேண்டிய முதல் மாற்றம் பொசஸிவ்னெஸை தூக்கி தூற எறியுங்கள்.

லவ் ’பிரேக் அப்’ ஆகாமல் இருக்க உங்களுக்குள் வர வேண்டிய முதல் மாற்றம் இதுதான்!

முதலில் ஒருவரை ஒருவர் நம்புங்கள். அன்பின் மற்றொரு பெயர் நம்பிக்கையும்தான். வெளிப்படையாகப் பேசுங்கள். ஒருவர் சொல்வதை மற்றவர் முழுமையாக நம்புங்கள். அவர் முழுமையாக நம்ப வேண்டும் எனில், நீங்கள் உண்மையை மட்டும் பேசுங்கள்.

காதலுக்குச் சின்னச் சின்னப் பொய்கள் அழகுதான். ஆனால், எது விளையாட்டுக்கு சொல்வது… எது நாளைக் கெடுப்பதற்கான பொய் என்ற புரிதல் அவசியம்.

லவ் ’பிரேக் அப்’ ஆகாமல் இருக்க உங்களுக்குள் வர வேண்டிய முதல் மாற்றம் இதுதான்!

பொசஸிவ்னெஸ் உள்ளுக்குள் சின்னதாக இறங்கினால், உங்கள் காதல் வாழ்க்கையில் பேரிடி வேகமாக நுழைகிறது என்று அர்த்தம். எனவே, பொசஸிவ்னெஸ் உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நுழைய விட்டுவிட்டால் விரட்டுவது எளிதல்ல.