இந்திய விமானங்கள் பறக்க 15 நாடுகள் தடை விதித்த நாடு இதுதான்

 

இந்திய விமானங்கள் பறக்க 15 நாடுகள் தடை விதித்த நாடு இதுதான்

கொரோனா நோய்த் தொற்றில் முதலில் நிறுத்தப்பட்டது விமான சேவைதான். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் விமானச் சேவைகளுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏனெனில், விமானப் பயணிகள் மூலமாகவே கொரோனா நோய்த் தொற்று நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாட்டில் அநேக நாடுகள் கவனம் கொண்டிருந்தன.

தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 3 லட்சத்து  51 ஆயிரத்து 589 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 50 ஆயிரத்து 555 பேர்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 73,59,720 பேர்.

இந்திய விமானங்கள் பறக்க 15 நாடுகள் தடை விதித்த நாடு இதுதான்

கடந்த இரு வாரங்களாக புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் இந்தியாவே உலகளவில் முதல் நாடாக இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 68,74,596 பேரும், இந்தியாவில் 52,14,677 பேரும், பிரேசில் நாட்டில்  44,57,443 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் 46,295 பேரும், பிரேசிலில் 35,757 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 96,793 பேராக அதிகரித்துள்ளனர்.

இந்திய விமானங்கள் பறக்க 15 நாடுகள் தடை விதித்த நாடு இதுதான்

இதனால் இந்தியவிலிருந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கடும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் துபாய் சென்ற ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.

இதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக துபாய் அரசு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இன்னும் 15 நாட்களுக்கு துபாயில் பறக்க கூடாது என்று தடை விதித்திருக்கிறது. அடுத்த மாதம் 3 –ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.