8.. 6.. 5 – பாமக ராமதாஸ் ட்விட்டரில் கேட்கும் புதிருக்கு இதுதான் விடை!

 

8.. 6.. 5 – பாமக ராமதாஸ் ட்விட்டரில் கேட்கும் புதிருக்கு இதுதான் விடை!

அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. சென்ற பாராளுமன்ற தேர்தலில் 7 இடங்கள் அதிமுக இடம் பெற்றது. அதில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டார். ஆனால் அந்தத் தொகுதி உட்பட எந்த தொகுதியிலும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறவில்லை. அதிமுக கூட்டணிக்கே கிடைத்தது ஒரே ஒரு இடம் தேனி மட்டுமே.

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற பாராளுமன்ற தேர்தல் கூட்டணி இந்த முறை சட்டமன்ற தேர்தலின் தொடர்கிறது என்று பல இடங்களில் கூறியிருந்தார். அதனால் பாமகவும் இந்த கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்லப்பட்டது.

8.. 6.. 5 – பாமக ராமதாஸ் ட்விட்டரில் கேட்கும் புதிருக்கு இதுதான் விடை!

ஆனால், இதை உறுதியாக பாட்டாளி மக்கள் கட்சி எங்குமே வெளிப்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அக்கட்சி முடிவு குறித்து, கருத்து தெரிவித்த பா.ம.கட்சி மூத்த தலைவர் ஜிகே மணி ’அது அதிமுகவின் முடிவு எங்களுடைய முடிவை மருத்துவர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்’ என்றுதான் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இரண்டு கட்டங்கள் பாட்டாளி மக்கள் கட்சியோடு சட்டமன்ற தேர்தலுக்காக பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்பட்டது. பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் வேலுமணியின் தங்கமணியின் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்தச் சந்திப்பு முடிந்ததும் மருத்துவர் ராமதாஸ் ஒரு ட்வீட் போட்டு இருந்தார் அதில், ‘அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

8.. 6.. 5 – பாமக ராமதாஸ் ட்விட்டரில் கேட்கும் புதிருக்கு இதுதான் விடை!

ராமதாஸின் முதல் நோக்கம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பதுதான் என பல இடங்களில் குறிப்பிடுகிறார். வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு என்ற போராட்டத்தை அவர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார். 1980களின் இறுதியில் பாமக நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. அதன் காரணமாகவே கருணாநிதி தலைமையிலான ஆட்சி அமைந்தது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கின்ற பிரிவை உருவாக்கி அதற்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

இப்பொழுது அதில் உள்ஒதுக்கீடு என்கின்ற அளவில் பாமக தரப்பில் இறங்கிவந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் பாமக நிறுவனத் தலைவர் ’8…6…5.
இங்கு மட்டும் ஒன்றே ஒன்று? இந்த புதிருக்கு விடை சொல்லுங்கள்’ என்று ட்விட்டரில் கேட்டிருக்கிறார்.

8.. 6.. 5 – பாமக ராமதாஸ் ட்விட்டரில் கேட்கும் புதிருக்கு இதுதான் விடை!

இதுகுறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்தோம். அப்போது முதலில் 5 சதவீத வன்னியர்களுக்கான உள்இட ஒதுக்கீட்டு தருகிறோம் அதிமுக தரப்பில் தரப்பில் சொல்லப்பட்டதாகும். பாமக தரப்பில் அழுத்தம் தரப்பட்டதும் 6% இடஒதுக்கீடுக்கு நகர்ந்தார்களாம். ராமதாஸ் இதற்கும் கடுமையாக மறுக்கவே 8 சதவிகித உள் ஒதுக்கீடு என்ற அளவில் பேச்சு வார்த்தை நிற்கிறதாம்.

மருத்துவர் ராமதாஸ் 15 சதவீதத்துக்கு குறைவாக ஏற்க முடியாது என பிடிவாதமாக இருக்கிறாராம். இதைதான் சூசகமாக பாமக தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டரில் புதிரை போல போட்டிருக்கிறார். அதற்கு கமெண்ட் செய்பவர்களும் 15 சதவீதத்திற்கு ஒத்துக் கொள்ள வேண்டாம் என்றும் சொல்லியுள்ளனர்.