புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் இன்னொரு நாடு இதுதான்!

 

புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் இன்னொரு நாடு இதுதான்!

கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்போது பிரச்சனை வேறு வகையில் பாதிப்பு தொடங்கியிருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 71 லட்சத்து 72 ஆயிரத்து 352 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 40 லட்சத்து 89 ஆயிரத்து 674 நபர்கள்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் இன்னொரு நாடு இதுதான்!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்து விட்டது. தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,13,83,034 பேர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசியே தீர்வு என்ற நிலைக்கு அனைத்து நாடுகளும் வந்துவிட்டன. ஆனால், சிக்கல் வேறு வடிவம் எடுத்து விட்டது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது மனிதர்களைத் தொற்றும் வேகம் அபரிமிதமாக இருக்கிறது.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் இன்னொரு நாடு இதுதான்!

இதனால், பிரிட்டனோடு பல நாடுகள் போக்குவரத்துத் தொடர்பை நிறுத்தி விட்டன. இந்தியாவும் அவற்றில் ஒன்று. தற்போது இந்த புதிய வகை வீரியமிக்க வைரஸ் இன்னொரு நாட்டிலும் தென்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

பிரிட்டனிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற இருவருக்கு இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. அதனால், ஆஸ்திரேலிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட்டிருக்கிறது.