திருவாரூர் மத்திய பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து!

 

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை புரட்டி போட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த இந்த நோய்த் தொற்றில் இருந்து மக்களை காக்க, அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, அடுத்த கல்வியாண்டு தொடங்கியும் இன்னும் பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. மேலும், மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதன் பேரில், ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே நடத்தப்படாமல் இருக்கும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும், பள்ளிகளின் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் ஆக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து!

இந்த நிலையில், திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தின் அனைத்து ஆண்டு பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அப்பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு ஆன்லைனில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு முந்தைய பருவத் தேர்வின் அடிப்படையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.