திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

 

திருவண்ணாமலை  தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை  தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருவண்ணாமலை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தீபத் திருவிழாவில் உலகெங்கிலும் உள்ள சிவ பக்தர்கள் வந்து தீபத்தை கண்டு வணங்குவது வழக்கம். இருப்பினும் இந்த ஆண்டு கொரோனா காரணமாக திருவண்ணாமலை தீப விழா நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தன. இதையடுத்து இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி தீபத் திருவிழா நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்திருந்தார். இருப்பினும் மலை மீது பக்தர்கள் செல்லவும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை  தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் அண்ணாமலையார் கோயிலுக்குள்ளேயே தீபத் திருவிழா நடைபெறவுள்ளது. நவ 29 அதிகாலையில் கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபமும் ஏற்றப்படும். இதனிடையே டிவியில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவை பக்தர்கள் கண்டுகளிக்க ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.