கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர்

கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க உள்ளதால், திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு, ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தி உள்ளார்.

கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையில் இருந்து இன்று இரவு 9 மணி முதல் வினாடிக்கு ஆயிரத்து 400 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மழை தொடரும் பட்சத்தில், நீர் திறப்பின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த தண்ணீர் நகரி ஆற்றின் வழியாக பூண்டி அணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.

கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இதனால், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டங்களில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், வருவாய்துறை, காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.