உச்சி வெயிலில்.. ‘திமுக வேட்பாளருக்காக’ முட்டிப் போட்டு பிரச்சாரம்!

 

உச்சி வெயிலில்.. ‘திமுக வேட்பாளருக்காக’ முட்டிப் போட்டு பிரச்சாரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நாளையோடு பிரச்சாரங்கள் முடிவடைவதால் அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருக்கின்றன. மக்களின் வாக்குகளை பெறுவதற்கு காலில் விழக் கூட தயங்காத வேட்பாளர்கள், புது வித பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். சாமானிய மக்களுடன் இணைந்து டீ குடிப்பது, துணை துவைப்பது, நடனம் ஆடுவது போன்ற வழக்கமான அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உச்சி வெயிலில்.. ‘திமுக வேட்பாளருக்காக’ முட்டிப் போட்டு பிரச்சாரம்!

இந்த நிலையில், திருத்தணி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக உறுப்பினர்கள் திருத்தணி கோவிலின் படியில் முட்டி போட்டு ஏறி வாக்கு சேகரித்த சம்பவம் வைரலாகிக் கொண்டிருக்கிறது. திருத்தணி கோவிலின் அடிவாரத்தில் இருந்து உச்சி வரையில் இருக்கும் 365 படிகளிலும், திமுக உறுப்பினர்கள் 20 பேர் முட்டி போட்டு ஏறி வாக்கு சேகரித்தனர்.

வேண்டுதலை சிறப்பாக செய்து முடித்து விட்டதால் திருத்தணி தொகுதியை சந்திரன் தான் கைப்பற்றுவார் என அவர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். உச்சி வெயிலில்.. வேண்டுதல் என்ற பெயரில் அவர்கள் முட்டி போட்டு ஏறிச் சென்றது அங்கிருந்தோரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.