பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் திருப்பாற்கடல் கோயில்!

 

பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் திருப்பாற்கடல் கோயில்!

திருமாலின் நாபிக்கமலத்தில் பிறந்த பிரம்மா ஒருமுறை ஆணவ செருக்குடன் அலைந்தார். பிரம்மாவின் செயல் அவரது மனைவி சரஸ்வதி தேவிக்கு வெறுப்பை உண்டாக்கியது. ஒரு நாள் பிரம்மா திருமாலை மனதில்கொண்டு மிக பிரமாண்டமாக யாகம் நடத்த தீர்மானித்தார். பொதுவாக யாகமோ, பூஜையோ ,ஹோமமோ எதை செய்தாலும் அருகில் மனைவி இருக்க வேண்டும் . இதை நமது சாஸ்திரம் கூறுகிறது. ஏற்கனவே பிரம்மா மீது கடும் கோபத்தில் இருந்த சரஸ்வதி தேவி யாகத்திற்கு செல்ல மறுத்தார். ஆனால் பிரம்மாவோ மனைவி இல்லாமல் யாகம் செய்யத் தீர்மானித்து ஸ்ரீ சாவித்திரி மற்றும் ஸ்ரீகாயத்ரி இருவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். இதனால் கோபமான சரஸ்வதிதேவி நதியாக உருவெடுத்து பிரம்மாவின் யாகத்தை அழிக்க முற்பட்டார்.

பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் திருப்பாற்கடல் கோயில்!

வேகவதி என்ற பெயரில் பிரம்மாவின் யாகத்தை கலைக்க சரஸ்வதி தேவி நதியாய் வந்து கொண்டிருந்த நிலையில் திருமால் அங்கு ஆதிசேஷனாக தோன்றி சரஸ்வதி தேவியை ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதபடி செய்தார். அந்த கணம் பிரம்மா மற்றும் சரஸ்வதி தேவி இருவரும் தங்கள் தவறை உணர்ந்து இணைந்தனர்.அத்துடன் அங்கு திருமால் பிரம்மா மற்றும் சரஸ்வதி தேவி இருவருக்கும் காட்சி தந்து, அன்று முதல் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்னும் திருநாமத்தில் அங்கேயே அருள்பாலித்து வருகிறார்.

பிரிந்த தம்பதியை ஒன்று சேர்க்கும் திருப்பாற்கடல் கோயில்!

சென்னை – வேலூர் சாலையில் சென்னையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் காவேரிப்பாக்கம் என்னும் ஊரை அடுத்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருப்பாற்கடல் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கு ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் திருமால் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. திருப்பாற் கடலில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வழிபட்டால் , ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். அத்துடன் கணவன், மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்தால், யாரேனும் ஒருவர் இங்கு வந்து மனமுருகி வேண்டினால் கூட பிரிந்த தம்பதி ஒன்று சேர்வார்கள் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது.