Home தமிழகம் 'நேரில் வரவேண்டாம்' பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து சு.திருநாவுக்கரசர்

‘நேரில் வரவேண்டாம்’ பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து சு.திருநாவுக்கரசர்

சு.திருநாவுக்கரசர், மூத்த அரசியல் தலைவர். அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து ஆறுமுறை வென்றவர். மாநில அமைச்சர், மாநில துனை சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர், மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். தொடக்கத்தில் அதிமுகவில் இருந்தார். பின்பு, பாரதிய ஜனதா கட்சியின் இணைந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில்போது திருச்சி பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவரின் பிறந்த நாள் ஜூலை 13 ஆகும். அதையொட்டி தொண்டர்கள் தன்னை சந்திக்க நேரில் வர வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

'நேரில் வரவேண்டாம்' பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து சு.திருநாவுக்கரசர்

thirunavukkarasar

அது குறித்த சு.திருநாவுக்கரசர் அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் மக்கள் அவதியுறும் இந்த நேரத்தில் ஜுலை 13-ம் நாள் எனது பிறந்தநாளை வழக்கமாக ஆண்டுதோறும் கொண்டாடுவது போல் இந்த ஆண்டு பொது நிகழ்ச்சியாக பிறந்த நாளினை நடத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

எனது பிறந்த நாள் அன்று தயவு செய்து என்னை யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வரவேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தத்தம் பகுதிகளில் சமூக இடைவெளி காத்து யாருக்கும் இடையூறு இல்லாத விதத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோர் வாழும் விடுதிகள், காப்பகங்கள், ஆசிரமங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவைப்படும் உணவு, உணவுப் பொருட்கள், உடைகள், உதவிகள் வழங்கிடுமாறும், அதுபோல் துப்புரவு பணியாளர்களை கவுரவிக்கும் விதத்தில் அவர்களுக்கும் உதவிகளை தங்களால் இயன்ற அளவிற்கு இயன்றவற்றை அளித்திடுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சுவரொட்டிகள், விளம்பரங்கள் போன்றவற்றை தவிர்த்து இவைகளுக்காக செலவிடும் தொகையினை மேற்குறிப்பிட்ட நலத் திட்ட உதவிகளுக்கு பயன்படுத்திடுமாறு என் மீது அன்புள்ளம் கொண்ட அனைவரையும் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.

'நேரில் வரவேண்டாம்' பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து சு.திருநாவுக்கரசர்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

அழுகிய அண்ணனின் உடல் மீது நின்று சமைத்த மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி!

மதுரை முனியாண்டி புரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயச்சந்திரன் என்ற 65 வயதுடைய நபர் வசித்து வந்துள்ளார். அவருடன் அவரது சகோதரி சுப்புலட்சுமி (55) மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.கொரோனா...

“மதவெறியை தூண்டும் ட்வீட்டுகள்” – ட்விட்டருக்கு கட்டம் கட்டும் மத்திய அரசு!

ட்விட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்குமான மோதல் உச்சம் பெற்றுள்ளது. ட்விட்டருக்கான சட்டப் பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. அதாவது ட்விட்டரில் யார் சர்ச்சை பதிவுகளைப் போட்டாலும் அதற்கு ட்விட்டரே...

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்!

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். முன்னாள் முதல்வர்கள்...

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்… வானதி சீனிவாசன் வேண்டுகோள்!

டெல்லி சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோதாவரி, காவிரி நதிநீர் இணைப்பு பற்றி பேச வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews